Garudan: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில் கருடன் வெளியானது. மே மாத இறுதியில் ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் மூலம் சூரி ஹீரோவாக அதிக கவனம் பெற்றார். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு பிறகு தான் அவருக்கு பல ஹீரோ வாய்ப்புகள் தேடி வந்தது.
இப்படி ஆடியன்சால் கொண்டாடப்பட்ட படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. அதேபோல் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றிருந்தது.
ஆனால் படம் ஓடிடியில் வெளியானதே ஒப்பந்த அடிப்படையில் தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது சமீப காலமாக சாட்டிலைட் டிஜிட்டல் வியாபாரம் கொஞ்சம் சரிவடைந்துள்ளது.
அக்ரிமெண்ட் போட்டு கருடனை வாங்கிய அமேசான்
இதனால் நன்றாக தியேட்டரில் ஓடி லாபம் பார்த்த படங்களை வாங்குவதற்கு கூட ஆள் இல்லாத நிலைதான். முன்னணி நிறுவனங்கள் கூட இந்த படங்களை வாங்குவதற்கு தயாராக இல்லை.
ஆனாலும் கருடன் அமேசான் தளத்தில் வெளியானது. அவர்கள் இதை ரெவென்யூ ஷேர் அதாவது வரும் வருமானத்தில் இவ்வளவு என்ற ஒப்பந்தத்தில் தான் வாங்கி இருக்கின்றனர்.
இந்த தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தான். நல்லா ஓடுன படத்தைக்கே இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
சமீப காலமாக சிறு பட்ஜெட் படங்களை மக்கள் வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் பார்த்து விடுகின்றனர். இதில் தியேட்டரில் ஓடாத படங்கள் டிஜிட்டலில் ட்ரெண்டானதும் உண்டு.
ஆனாலும் முன்னணி நிறுவனங்கள் இப்போது பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்குவதில் தான் போட்டி போட்டு வருகின்றன. இதனால் கருடன் போல் நல்லா ஓடிய படங்கள் வியாபாரமாகாமல் தவிக்கும் நிலை இருக்கிறது.