வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஓவராக ஆட்டம் போட்ட அம்பானிக்கு 15000 கோடியில் செக் வைக்கும் Ratan TATA.. விரைவில் அதிவேக 5G இன்டர்நெட் சேவை

Ambani and Ratan Tata: இப்ப இருக்கிற காலகட்டத்தில் மொபைல் ஒவ்வொருவருக்கும் அத்தியாவாசிய பொருளாக அமைந்துவிட்டது. அந்த வகையில் எது இருக்கோ இல்லையோ, மொபைல் கண்டிப்பாக எல்லோருடைய கையிலும் இருக்கிறது. அதற்கு காரணம் இன்டர்நெட் வசதி இருப்பதால் சோசியல் மீடியாவில் பல விஷயங்களை தெரிந்து கொண்டு நேரத்தை செலவழிக்க பயன்படுகிறது.

அதனால் அதிவேகமாக இன்டர்நெட் வசதியை தரக்கூடிய 5G சேவைக்கு ஒவ்வொருவரும் அடிமையாகிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்து கொண்டே வருகிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு ரீசார்ஜ் பண்ணி 5G சேவையை மக்கள் பெற்று வருகிறார்கள்.

குறைந்த கட்டணத்தில் 5G சேவையை கொடுக்கும் BSNL

ஆனால் இதை தடுக்கும் பொறுப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அவர்களுடைய டெலிகாம் மார்க்கெட்டில் பல யுக்திகளை பாலோ பண்ணி வருகிறார்கள். ஏற்கனவே மத்த டெலிகாமை விட BSNl கட்டண சேவை கம்மியாக தான் இருக்கிறது. இதனால் தற்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக BSNL க்கு மாறி வருகிறார்கள். அந்த வகையில் நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை எகிறி கொண்டே வருகிறது.

அதற்கு காரணம் மலிவான விலையில் கஷ்டமர்கள் திருப்தி அடையும் வகையில் மாதாந்திர கட்டணத்தை குறைத்து மக்கள் கண்ணை மூடிக்கொண்டு பிஎஸ்என்எல் சிம்மை வாங்கும் அளவிற்கு போய்விட்டார்கள். ஆனாலும் சிலர், பிஎஸ்என்எல் போகாமல் இருப்பதற்கு காரணம் இன்டர்நெட் சேவை அதிவேகமாக கிடைக்காமல் இருப்பதால்தான்.

அதனால் இதை சரி செய்யும் விதமாக BSNL நிறுவனத்துடன் ரத்தன் டாட்டா நிறுவனம் கைகோர்த்து இருக்கிறது. கிட்டத்தட்ட 15,000 கோடியில், BSNL நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அனைத்து கிராமங்களிலும் 4G சேவை அதிவேகமாக கிடைப்பதற்கு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இன்னும் கூடிய விரைவில் 5G இன்டர்நெட் சேவையை கம்மி விலையில் கொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

இதனால் ஜியோவை விட பெஸ்ட் சிம் BSNL தான் என்று மக்கள் அனைவரும் பிஎஸ்என்எல் சிம்ஐ வாங்க போகிறார்கள். என்னால தான் 5ஜி அதிவேகமாக கொடுக்க முடியும் என்று ஓவராக ஆட்டம் போட்டு கஸ்டமர்களின் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காமல் கட்டணத்தை அதிகரித்துக் கொண்டு போன அம்பானிக்கு செக் வைக்கும் விதமாக ரத்தன் டாட்டா எடுத்த அதிரடி முடிவால் தற்போது மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் அதிக கட்டணத்தை உயர்த்தி 28 நாட்களுக்கு மட்டுமே என்று ஒரு கோட்பாட்டை வைத்திருந்தார்கள். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவான விலையில் 30 நாட்களுக்கு இன்டர்நெட் சேவையை கொடுக்கிறது. அத்துடன் வெறும் 110 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால்கள் கிடைக்கப் போகிறது.

முட்டி மோதும் bsnl மற்றும் ஜியோ

- Advertisement -spot_img

Trending News