சில படங்கள் அறிவிப்புகள் அறிவித்த பின்னர் நின்று போகும். அவ்வாறு நின்று போன படங்களின் டைரக்டர் ஹீரோ காம்போ பின்னர் இணைவது கடினமாகி போகிறது. அமீரின் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் ஆதிபகவன். பாக்ஸ் ஆபிஸில் சோதப்பினாலும், ஜெயம் ரவியின் நடிப்பு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அந்தப் படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை அமீர் கூறியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில், பாலாவின் நான் கடவுள் படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டான அஜித், பின்னர் அதிலிருந்து விலகியபோது, பருத்திவீரனுக்கு முன் தனது படத்தில் பணியாற்ற இயக்குனர் அமீரை அழைத்துள்ளார்.
அந்த நேரத்தில், நாம் ஒரு படம் பண்ண வேண்டும், அவருக்கு மிகவும் பிடித்த ஒரு கதையை நான் அவரிடம் சொன்னேன். சொல்லப்போனால், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, நாங்கள் ஒரு படம் செய்கிறோம் என்று தெரிவிக்கச் சொன்னார். பல்வேறு காரணங்களுக்காக நான் அதை செய்ய மாட்டேன் என்று சொன்னேன். நான் கடவுள் படத்திற்காக அவர் ஒப்புக்கொண்ட நேரம் அது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு முடிவெடுப்போம், உணர்ச்சிகரமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால், பின்னர் அதுவும் நடக்கவில்லை” என்றார்.
உண்மையில் ஆதிபகவான்படத்தில் பகவான் கேரக்டரில் கொஞ்சம் நளினமாகவும், மாஸாகவும் நடிக்க வேண்டும். அதனை அஜித் முன்னரே வரலாறு படத்தில் சிறப்பாக பண்ணியிருப்பார். ஒருவேளை அஜித் நடித்திருந்தால் திரையில் பார்க்க சுவாரசியமாக இருந்திருக்கும்.
இந்த காம்போ மீண்டும் நடக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது அமீர் டைரக்டராக இல்லாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வெற்றி மாறனின் வடசென்னை படத்தில் நடித்ததற்காக அமீர் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
அஜித் தற்போது வலிமை படத்தின் வெற்றிக்கு பின்னர் ஏ.கே. 62 படத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.