வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாவனி கூட சுத்துறதுக்கு மட்டும் காசு இருக்கா.? உதவி கேட்டு அசிங்கப்பட்ட அமீர், பாலாவை பார்த்தும் திருந்தல பாரு

Amir-Pavni: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாவனியை விரட்டி விரட்டி காதலித்து தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் அமீர். இருவரும் அடிக்கடி வெளியில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெகு பிரபலம். அதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் குவியும்.

ஆனால் அதை வைத்து ரசிகர்கள் இப்போது அமீரை அசிங்கப்படுத்தி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர் சமீபத்தில் போட்ட ஒரு வீடியோ தான். அதில் அவர் இரு மாணவர்களின் கல்விக்கு யாராவது உதவுமாறு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.

Also read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

கடந்த சில வருடங்களாக அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு தரப்பிலிருந்து உதவி வந்திருக்கிறது. ஆனால் தற்போது அவர்களால் உதவ முடியாத சூழலில் தான் அமீர் இப்படி ஒரு வீடியோவை போட்டு உதவி கேட்டிருக்கிறார். ஆனால் அதை பார்த்த பலரும் அவரை காதலியுடன் ஜோடியாக சுற்றுவதற்கு மட்டும் காசு இருக்கு, இவர்களை படிக்க வைக்க உங்களிடம் காசு இல்லையா என்று அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பாலாவை பார்த்து கூட நீங்கள் திருந்தவில்லையா என கொந்தளித்து போய் இருக்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் கஷ்டப்படுபவர்களுக்காக ஒரு ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரை பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

Also read: காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

மேலும் குழந்தைகளை படிக்க வைப்பது, முதியோர்களுக்கான உதவி செய்வது என்று தனக்கு கூட சேர்த்து வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு உதவுவது தான் பாலாவின் குணம். இதை பல சமயங்களில் நாம் வெளிப்படையாகவே பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது அமீர் இப்படி ஒரு வீடியோவை போட்டு நன்றாக அசிங்கப்பட்டு இருக்கிறார். தற்போது பெரிய திரையிலும் கவனம் செலுத்தி வரும் அமீர், பாவனி இருவரும் நினைத்திருந்தால் அந்த மாணவர்களுக்கு உதவி செய்திருக்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி வீடியோவை போட்டு எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளனர்.

Also read: ஒரே வீட்ல ரெண்டு பெட்ரூமா.? லிவிங் டு கெதரில் ஏக்கர் கணக்கில் புளுகும் அமீர், பாவனி ஜோடி

Trending News