வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மன நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மீண்டும் சூர்யா.. ப்ரோமோஷனில் கொடுத்த சூப்பர் அப்டேட்

சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பான் இந்திய அளவில் ‘கங்குவா’ வெளியாக உள்ளதால், பல மாநிலங்களில் ப்ரமோஷனை மும்முரமாக நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது ‘கஜினி’. சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்றளவும் சூர்யாவின் வெற்றி படங்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது ‘கஜினி’.

இதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, ஹிந்தியில் கஜினி படம் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில், அமீரகான் நடித்து சூப்பர்ஹிட் ஆனது. இந்த நிலையில் இதன் பார்ட் 2-க்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

சூர்யாவுடன் இணையும் பாலிவுட் கஜினி

ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இதனையடுத்து சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் சூர்யா அடுத்ததாக ஆர். ஜெ பாலாஜி படத்திலும், பாலிவுட் படமான கர்ணன் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதற்க்கு பின் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.

‘கஜினி’ படத்தின் வெற்றியை தொடர்ந்தது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘ஏழாம் அறிவு’ படத்தில் நடித்தார் சூர்யா. இதனையடுத்து இருவரும் இணையவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவிருக்கின்றனர்.

இதில் ஹயிலைட் என்னவென்றால், ‘கஜினி 2’ படத்தில் சூர்யா, அமீர்கான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News