வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அஜித்தை வைத்து தயாரித்து மண்ணை கவ்விய அமிதாப் பச்சன்.. ஆனா மொத்த பாடல்களும் ஹிட்டுன்னு சொன்னா நம்பவா போறீங்க

பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் நடிப்பை தாண்டி பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் தமிழில் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தையும் தயாரித்து இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதனால் அமிதாப்பச்சன் மீண்டும் தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற நினைப்பையே கைவிட்டு விட்டாராம். அந்த அளவுக்கு அந்த படம் அவருக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி மண்ணை கவ்விய அந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. ஆனாலும் அதுதான் உண்மை.

Also read: இளம் இயக்குனருக்கு அல்வா கொடுத்த ரஜினி.. அரவணைத்த கமல், பற்றி எரியும் ஈகோ

கடந்த 1997 ஆம் ஆண்டு ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த உல்லாசம் திரைப்படம் தான் அது. அஜித், விக்ரம், மகேஸ்வரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் ராஜா இசையமைத்திருந்த அப்படத்தில் முத்தே முத்தம்மா என்ற ஒரு பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தார். அப்பாடல் பலரின் ஃபேவரைட் பாடலாக அப்போது இருந்தது.

அதைத்தொடர்ந்து உன்னிகிருஷ்ணன், ஹரிணி பாடியிருந்த வீசும் காற்றுக்கு பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. அந்த வகையில் 50 லட்சத்தில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெறும் 30 லட்சத்தை மட்டுமே வசூலித்தது. இதனால் அப்படம் அஜித்துக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது.

Also read: மாதவனுக்காக உருவாக்கிய கதை.. அஜித் நடித்ததால் படுதோல்வி, புலம்பி தவிக்கும் இயக்குனர்

மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் ஒரு தயாரிப்பாளராக கெத்து காட்ட நினைத்திருந்த அமிதாப்பச்சன் அதன் பிறகு கோலிவுட்டில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் அருண் விஜய் தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் அப்போதுதான் அவர் நடிக்க ஆரம்பித்ததால் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் நடிப்பதை அவர் விரும்பவில்லை. அதன் பிறகு தான் விக்ரமுக்கு அந்த வாய்ப்பு சென்று இருக்கிறது. அவரும் அப்போது ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டுதான் இருந்தார். அந்த வகையில் இப்படம் தோல்வி அடைந்தாலும் விக்ரமை ரசிகர்கள் முன் அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Also read: துணிவு கொடுத்த தைரியம், கண்டிஷன் போட்ட அஜித்.. அவசர ஆலோசனையில் லைக்கா

Trending News