Rajini Remake Movies: ரஜினி தற்போது 72 வயதிலும் சூப்பர் ஸ்டார் ஆக கொடி கட்டி பறந்து வருவதற்கு அவருடைய வெற்றி படங்களின் லிஸ்ட் ஏகபோகமாக இருப்பதினால் தான். அந்த வகையில் இவர் நடித்த படங்கள் மக்களுக்கு பிடித்ததாகவும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாகவும் அமைந்திருக்கும். முக்கியமாக 80, 90களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களை யாரும் மறக்க முடியாத அளவிற்கு ஒரு உன்னதமான படைப்பாக இருக்கிறது.
அந்த வகையில் இவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அமிதாப் பச்சனும். அதாவது 80,90களில் அமிதாப்பச்சன் நடித்த சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் கிட்டத்தட்ட 11 படத்தை ரீமேக் செய்து அதில் ரஜினி நடித்து வெற்றியை பார்த்திருக்கிறார். அந்தப் படங்களின் லிஸ்ட் தற்போது பார்க்கலாம். அமிதாபச்சன் நடித்த திவார் என்ற சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்து தீ என்று பெயரை வைத்து தமிழில் ரஜினி நடித்தார்.
Also read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி
இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் நடித்த டான் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து பில்லா என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று இவர்கள் இருவருக்குமே நல்ல வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக குத்தாரின் என்ற படத்தை ரஜினி தமிழில் படிக்காதவன் என்று மாற்றியமைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றியைப் பார்த்தார்.
இதனை அடுத்து கஸ்மே வாதே என்ற படத்தின் ரீமேக் தான் தமிழில் தர்மத்தின் தலைவன். இதில் ரஜினி, பிரபு, சுகாசினி மற்றும் குஷ்பூ ஆகிய முக்கிய வேடங்களில் நடித்தார்கள். அடுத்ததாக நமக் ஹலாலின் என்ற ரீமேக் படத்தை வேலைக்காரன் என்று மாற்றி அமைத்து ரஜினி, சரத்பாபு, அமலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. அடுத்ததாக மார்ட்டின் என்ற ஹிந்தி படத்தை தமிழில் மாவீரன் என்று ரீமேக் செய்து ரஜினி நடித்தார்.
இதனைத் தொடர்ந்து மஜ்பூர் என்ற ஹிந்தி படத்தை நான் வாழ வைப்பேன் என்று தமிழில் மாற்றி ரஜினி மற்றும் சிவாஜி கிரைம் திரில்லர் படமாக கொடுத்தார்கள். அடுத்ததாக கூன் பாசினா என்ற படத்தை தமிழில் சிவா என்று மாற்றி அமைத்து கலவையான விமர்சனத்தை பெற்றார். இதற்கு அடுத்து லாவாரிஸ் என்ற படத்தை பணக்காரன் என்று மாற்றி நடித்து ரஜினி, ரசிகர்கள் மனதை வென்றார்.
அடுத்ததாக அமர் அக்பர் அந்தோணியின் ரீமேக் படத்தை ராம் ராபர்ட் ரஹீம் என்று தமிழில் மாற்றி அமைத்து ரஜினி அவருடைய வினோதமான நடிப்பை கொடுத்தார். இதனை தொடர்ந்து திரிசூலின் என்ற ஹிந்தி படத்தை தமிழில் மிஸ்டர் பாரத் என்று ரீமேக் பண்ணி நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்படி அமிதாப்பச்சனின் வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து ரஜினி நடித்ததால் இவர்களுடைய நட்பு ரொம்பவே பிரிக்க முடியாத அளவிற்கு உறுதியாகி விட்டது.
Also read: இருக்குற இடமே தெரியாமல் போன 80ஸ் ஹீரோக்கள்.. ரஜினி அளவுக்கு வந்திருக்க வேண்டிய நடிகர்