புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதி 68 படத்தின் 3 டைட்டிலில் லீக்கான ஒரு டைட்டில்.. வெங்கட் பிரபு கிட்ட சீக்ரெட் எல்லாம் கிடையாது பாஸ்

VIjay in Thalapathy 68 Title Leaked: விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட், வாரிசு மற்றும் லியோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் அளவில் எந்தவித நஷ்டமும் ஏற்படாத வகையில் ஆட்ட நாயனாக ஜெயித்துக் கொண்டு வருகிறார். அதற்கு காரணம் இவருடைய ரசிகர்கள் தான் என்றாலும் விஜய்யின் நடிப்பும், ஸ்டைலும் பலரையும் கவர்ந்து கொண்டு வருகிறது.

அதனாலயே கொஞ்சம் கூட கேப்பே இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் தட்டி தூக்கி விடுகிறார். அந்த வகையில் லியோவிற்கு பிறகு தளபதி 68 படத்திற்காக முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்தில் பழைய மாதிரி விஜய்யை  இளமை துள்ளலுடன், 90ஸ் கிட்ஸ்க்கு ஏற்ற மாதிரி கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு.

இவர்கள் கூட்டணியில் பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள நடிகர்களும் இதில் இணைந்திருக்கிறார்கள். மேலும் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் சினேகா இவர்களும் தளபதி 68 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்கள். அத்துடன் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Also read: தளபதி ஃபிட்னஸிற்கு இதுதான் காரணம்.. விஜய் என்றும் இளமையாக இருக்க கடைப்பிடிக்கும் 5 விஷயங்கள்

இதனைத் தொடர்ந்து இப்படம் சிம்பு நடித்த மாநாடு படம் போல டைம் ட்ராவல் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அப்பா மகன் கதையை காட்டி அப்பாவை கொன்றவர்களை டைம் ட்ராவல் மூலம் கண்டுபிடித்து அவர்களை பழிவாங்குவது தான் மீதம் உள்ள கதையாக இருக்கும் என்ற தகவல் லீக் ஆகி இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக தற்போது தளபதி 68 படத்திற்கான மூன்று டைட்டிலை ரெடி பண்ணி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு டைட்டில் தற்போது லீக் ஆகி இருக்கிறது. தளபதி 68 படத்தின் டைட்டில் ” பாஸ்” என்று இருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது இப்படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சீக்ரெட்டாக வைத்திருந்த டைட்டில் லீக் ஆகிவிட்டது என்பதால் வேறு டைட்டிலை கூட வைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எப்படி இருந்தாலும் வெங்கட் பிரபுவால் எந்த ஒரு விஷயத்தையும் சீக்ரெட் ஆகவே வைத்திருக்கவே முடியாது. அதனால் தளபதி 68 படத்திற்கான டைட்டிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வருகிற புத்தாண்டுக்கு ரிலீஸ் பண்ணி விடலாம் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

Also read: விஜய் மேல் விழுந்த மிகப்பெரிய கரும்புள்ளி.. ஒரே நாளில் கெட்ட பெயரை மாற்றிய தளபதி

Trending News