புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த தங்கலான்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா அண்ட் கோ

Thangalaan: இப்போது எங்கு பார்த்தாலும் தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் தான் படு பயங்கரமாக நடந்து வருகிறது. இப்படம் வருகின்ற வியாழக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. தங்கலான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் அதன் தியேட்டர் உரிமையும் பல கோடி விற்கப்பட்டிருக்கிறது.

வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வரும் பா ரஞ்சித்தின் மற்றொரு அற்புதமான படைப்புதான் தங்கலான். அதிலும் விக்ரமின் கெட்டப் ரசிகர்களை மிரள செய்திருக்கிறது. தன் உடலை வருத்திக்கொண்டு தங்கலான் படத்தில் முழு உழைப்பையும் போட்டிருக்கிறார்.

இந்த சூழலில் தங்கலான் படத்தின் தமிழ்நாட்டு உரிமை எவ்வளவு விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமை 17 கோடி விற்கப்பட்டிருந்தது.

தங்கலான் படத்தின் தியேட்டர் உரிமை விற்கப்பட்ட தொகை

ஆனால் தங்கலான் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு காரணமாக இந்த படம் 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதாவது சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இவருடன் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் மற்றும் ஜியோ ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஞானவேல் ராஜாவுடன் சூர்யாவும் ஒரு பங்குதாரராக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தில் செயல்பட்டு வருவதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் படம் ரிலீசுக்கு முன்பே இவ்வாறு பல கோடி லாபம் பார்த்ததால் சூர்யா அண்ட் கோ உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் தங்கலான் படம் ஃப்ரீ புக்கிங்கில் மட்டும் இப்போது வரை கிட்டத்தட்ட 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் செய்யபோகும் தங்கலான்

Trending News