கதிரின் கேள்வியால் ஆடிப்போன அமிர்தா.. எழில் சொல்லப்போகும் பதில் என்ன

விஜய் டிவியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி என இரு தொடர்களையும் இணைத்து ஒரு மணி நேர மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் கோபி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால் படாத பாடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கோபியின் தந்தையின் பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைக்க பாக்கியா மற்றும் தனம் இருவரும் சென்றுள்ளனர். அப்போது பாக்கியா ராதிகாவிடம் உங்களுடைய வருங்கால கணவரையும் கண்டிப்பாக அழைத்து வரவேண்டும் என கூறுகிறார். உடனே ராதிகாவும் சரியான கூறியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க எழில், கதிர், முல்லை மூவரும் கோயிலுக்கு வந்துள்ளனர். அங்கு குழந்தை பிறக்காதவர்களுக்கு தொட்டில் கட்டி போடுவதை பார்த்த முல்லை தானும் அதை செய்ய வேண்டும் என எண்ணுகிறாள். உடனே கதிரும், முல்லையும் அந்த பரிகாரத்தை செய்கின்றனர்.

அப்போது அதே கோயிலுக்கு எதேர்ச்சையாக அமிர்தாவும் தன் குழந்தையுடன் வருகிறார். அப்போது எழில் அமித்ஷாவுடன் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த கதிரும், முல்லையும் யாராக இருக்கும் என மனதுக்குள்ளேயே எண்ணுகின்றனர். அதன்பிறகு எழில் அமிர்தாவை இவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அமிர்தா எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் ஆயிடுச்சு, இது என்னோட குழந்தை என கூறுகிறாள். உடனே கதிர் சரி உங்க வீட்டுக்காரர் எங்க வேலை பார்க்குறாங்க என கேட்கிறார். அமிர்தாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிறார்.

இதனால் எழில் அமிர்தாவின் கடந்த கால விஷயங்களை கதிரிடம் சொல்லி தனது காதலையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வார மகாசங்கமம் கலகலப்புடன் பல சுவாரஸ்யமான கதைக்களத்துடன் வர இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →