விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நிப்பேன்.. நேருக்கு நேர் சவால் விடும் பிரபல நடிகர்

Vijay: விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என நடிகர் ஒருவர் சூளுரைத்து இருக்கிறார்.

இவரின் தைரியத்தை பார்த்து ஆச்சரியப்படுவதா அல்லது சிரிப்பதா என்று நமக்கு தெரியவில்லை. ஏனென்றால் சவால் விட்ட நடிகர் அந்த மாதிரி.

கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

நேருக்கு நேர் சவால் விடும் பிரபல நடிகர்

விஜய் ரொம்பவும் அமைதியான ஒரு மனிதர், அவர் இந்த அரசியல் மேடையில் இப்படி எல்லாம் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளிப் போய்விட்டது.

அதனால் தான் விஜய் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நிற்க விருப்பப்படுகிறேன். திமுக அல்லது வேறு எந்த கட்சி என்னை முன்னிறுத்தினாலும் எனக்கு சம்மதம் தான்.

இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பவர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை காமெடியில் திக்கு முக்காட வைத்தார் பவர்ஸ்டார். தற்போது அரசியலில் விஜயுடன் போட்டி என்று கூறி மிரள வைத்திருக்கிறார்.

Leave a Comment