வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தொட்டதுக்கெல்லாம் ஜோசியம் பாக்குற ஆளாச்சே.. லோகேஷுக்கு ஏற்பட்ட பெரிய தலைவலி

Lokesh Movie Actor: இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் முதல் டாப் நடிகர்கள் வரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கிறது. ஆனால் லோகேஷ் சினிமாவை விட்டு விலகி இருக்கும் திறமையான நடிகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் பிரபல நடிகரை லோகேஷ் அடுத்து இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க வைக்க கமிட் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் படம் தான் தலைவர் 171. இந்த படத்தில் நடிகர் ஜீவன் நடிக்கிறார்.

ஆனால் 24 மணி நேரமும் ஜோசியத்தையே பார்த்து தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட ஜீவனை லோகேஷ் எப்படி தான் சமாளிக்க போகிறார் என்று தான் தெரியவில்லை. இந்த விஷயத்தில் லோகேஷ் தான் பாவம்.  ஏனென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எப்போது போகணும், யாருடன் பேசணும், யாருடைய படத்தில் நடிக்கணும் என தொட்டதுக்கெல்லாம் ஜோசியத்தை நம்பக் கூடியவர் தான் ஜீவன்.

Also read: தயாரிப்பிலும் கமலை அப்படியே பாலோ செய்யும் லோகேஷ்.. அடுத்த உலக நாயகன் இவர்தான் போல

ஜோசியத்தை அதிகம் நம்பும் ஜீவன்

இந்த இயக்குனரின் படத்தில் நடித்தால் கட்டம் சரி இருக்காது என நல்ல பட வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டவர். கடைசியில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது என்று சமீபத்திய பேட்டியில் திரை விமர்சகர் அந்தணன் ஆதங்கத்துடன் பேசினார்.

இந்த நிலையில் தலைவர் 171 படப்பிடிப்பு தளத்தில் ஜீவனின் நடவடிக்கையை பார்த்த பிறகு தான் லோகேஷுக்கு அவருடைய முழு சுயரூபமும் தெரியவரும். இவரை சமாளிப்பது தான் லோகேஷுக்கு பெரிய தலைவலியாக இருக்கும்.

Also read: உங்க பழைய வேலைய எல்லாம் இங்க வச்சிக்காதிங்க.. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

Trending News