An actor jiiva who loses by acting in the same films: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ்ன் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்திரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் ஜீவா.
தயாரிப்பாளரின் மகன் என்ற தலைக்கனம் இல்லாது, தனது கடின உழைப்பின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட ஜீவா, நண்பன், சிவா மனசுல சக்தி, கலகலப்பு 2 என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
வெற்றியோ,தோல்வியோ மார்க்கெட்டை ஜெட் வேகத்தில் உயர்த்தாமல் தயாரிப்பாளர்களின் மினிமம் கேரன்டி ஹீரோவாக இருக்கும் ஜீவாவிற்கு இப்போது இருக்கும் மைனஸ் எதுவென்றால் ஒரே மாதிரியான மசாலா படங்களில் நடிப்பது.
காதல், நட்பு, துரோகம் அதிகபட்சமாக கொஞ்சம் ஆக்சன் என்ற வட்டத்திற்குள்ளே வளைய வருகிறார் ஜீவா.
ஆரம்ப காலங்களில் கற்றது தமிழ், ரௌத்திரம் என வித்தியாசம் காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஆனால் தற்போது கொஞ்சம் வித்தியாசமாக ரிஸ்க்கான கதைகளை தேர்ந்தெடுக்க எடுக்க மறுக்கிறார் இந்த ராஜா வீட்டு கன்னுக்குட்டி.
எப்போதும் ஒரே மசாலா கதை தான். அதனால் இவர் நடிக்கும் படங்கள் பெயரளவுக்கு ஓடி விட்டு செல்கிறது.
இப்போது கூட நீ நல்ல வருவடா, ஜெமினி கணேசன், கோல்மால் என கைவசம் மூன்று படங்கள் உள்ளது. ஆனால் இந்த மூன்றும் ஒரே மாதிரியான கமர்சியல் படங்கள் தான்.
நஸ்ரியா ரி என்ட்ரி கொடுக்கும் ஜீவாவின் “நீ நல்லா வருவடா”
ஜீவாவின் சிவா மனசுல சக்தி என்ற வெற்றி படத்திற்கு பின்பு நஸ்ரியா உடன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் “நீ நல்லா வருவடா”.
பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் நஸ்ரியா.
தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா தொடர்ந்து ராஜா ராணி மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசமாக்கினார்.
மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
கடைசியாக நிவின்பாலியுடன் “ஓம் சாந்தி ஓசானா” என்ற மலையாள படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.