ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மனம் வெறுத்துப்போன விடுதலை பட நடிகர்.. பேங்க் வேலையை விட்டு சினிமா வந்தும் பிரயோஜனமில்ல

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் விடுதலை படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 கோடியை எட்டி இருக்கும் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

இந்த சூழலில் விடுதலை படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஒருவர் சினிமாவினால் மனம் நொந்து போன விஷயம் தெரிய வந்துள்ளது. “அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்”  சினிமாக்காரர்கள் வெறுக்கும் ஒரே விஷயம் என்றால் அது இந்த வார்த்தைதான்.

Also Read: மனித உருவில் மிருகமாய் இருக்கும் 5 இயக்குனர்கள்.. மூன்று பகுதிகளையும் திருப்பி எடுத்த வெற்றிமாறன்

சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைத்துவிட்டது என்று, இருக்கிறதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டு கேரியரை தொலைத்த பல பேரை நாம் பார்த்திருப்போம். ஆனால் இருபது வருடங்கள் போராடி ஜெயித்த நடிகர் ஒருவர் தான் கடந்து வந்த அனுபவத்தை கூறி வருகிறார்.

விடுதலை படத்தில்  விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து  வெட்டும் அந்த  நடிகர்  பெயர் சம்பத் ராம். 20 வருட போராட்டத்திற்கு பின் இப்பொழுது தான் சினிமாவில் ஜெயித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினி ஜெயிலிலிருந்து வெளிவரும் போது சம்பத் என்று இவர் பெயர் சொல்லி அழைப்பார்.

Also Read: செட்டே ஆகாத கேரக்டரை தேர்வு செய்த வெற்றிமாறன்.. விஜய்சேதுபதிக்கு முன் விடுதலை பட வாத்தியார் யார் தெரியுமா?

அதை இன்று வரை அவர் மறக்காமல் இருகிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் தன்னுடைய பெயரை சொல்லி அழைத்தார் என்பதை ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறாராம். ஆனால் சினிமாவில் நுழைவதற்கு முன் சம்பத் குடும்பத்திற்காக பேங்கில் வேலை செய்துள்ளார்.

அதை நடிப்பதற்காக விட்டு விட்டார். ஆனால் முதலில் இவருக்கு அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என்று கும்பலோடு கோவிந்தா போட வைத்து விட்டனர். இதற்காக இந்த வேலை விட்டோம் என்று முதலில் வருந்தியுள்ளார். இருப்பினும் பிடித்த வேலை செய்ய வேண்டும் என்று விடாமுயற்சியுடன் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அப்படி தான் விடுதலை படத்தின் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

Also Read: 11 நாட்களில் விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை

Trending News