வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

500 படங்களில் நடித்ததை வைத்து ஓரே படத்தை தயாரித்த பாக்யராஜ் பட நடிகர்.. தோல்விக்கு பின் வறுமையால் இறந்து போன சம்பவம்

Actor Bhagyaraj:  சினிமா பிரபலங்கள் பலருக்கும் ஒரு நல்ல நிலைமையை அடைந்தவுடன் தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும். அந்த வகையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் தயாரிப்பாளராக படங்களை எடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று.

அவ்வாறு பாக்யராஜ் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு முழு சொத்தையும் இழந்து இருக்கிறார்.

Also Read : 700வது படத்தில் கால் பதிக்கும் பாக்யராஜ் பட ஹீரோயின்.. மனோரமாவை ஓவர் டேக் செய்ய முயற்சி

அதாவது பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிட்டிபாபு. இந்த படத்திற்கு பெயராக இவருடைய பெயர் தவக்களை சிட்டிபாபு என்று மாறிவிட்டது. இந்த படத்தின் மூலம் அடுத்து அடுத்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது.

அதன்படி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் பட வாய்ப்பு குறைய படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் உருவாக்கிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே நண்பர்கள் விலகி விட்டனர்.

Also Read : குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் இதில் போட்டு உள்ளதால் படத்தை விட மனமில்லாமல் தன் வடபழனியில் வைத்திருந்த சொந்த வீட்டை விற்று முழு படத்தையும் எடுத்து முடித்தார். ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

அதன் பிறகு தவக்களை சிட்டிபாபுவுக்கு பட வாய்ப்புகளும் வராத நிலையில் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு இருந்துள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மாயா மச்சந்திரா என்ற தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரகசியமாக விஜய் டிவி பிரபலத்துடன் 2வது திருமணம் செய்த நடிகை.. புடிச்சாலும் புடிச்ச புளியங்கொப்பை

Trending News