வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சூப்பர் ஹிட் சீரியலிருந்து விலகும் பிரபலம்.. 8 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகர்!

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்ததும் அங்கு செல்ல வேண்டும் என்பதில் சின்னத்திரை சீரியலில் இருந்து விலகி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் வைதேகி காத்திருந்தாள். இந்த சீரியலில் கதாநாயகனாக பல வருடங்களாக சின்னத்திரையில் ஊறிக்கிடக்கும் ப்ரஜின் ஹீரோவாக நடிக்கிறார். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவருக்கு ஜோடியாக வைதேகி காத்திருந்தாள் சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்துக்கொண்டிருக்கிறார்.

எனவே இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி இந்த சீரியலில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதால் ரசிகர்களின் இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது ப்ரஜின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ப்ரஜின் இந்த சீரியலில் நடிப்பதினால் மட்டும் ஒரு சில கூட்டம் வைதேகி காத்திருந்தாள் சீரியலை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது.

அப்படியிருக்கும்போது ப்ரஜின் சீரியலில் இருந்து விலகுவது சின்னத்திரை ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. மேலும் ப்ரஜினுக்கு பதிலாக சீரியல் நடிகர் தினேஷ் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. நடிகர் தினேஷ் விஜய் டிவியில் ‘புதுக்கவிதை’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற சீரியல்களிலும் ஏற்கனவே நடித்து விஜய்டிவி ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக தினேஷ் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’, ‘நாச்சியார்புரம்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது தினேஷ் மீண்டும் 8 வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அத்துடன் சின்னத்தம்பி சீரியலில் நடித்த லோகேஷிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிகிறது. எனவே ப்ரஜினுக்கு பதில் ல் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் லோகேஷ் அல்லது தினேஷ் இருவருள் ஒருவர் சீரியலில் கதாநாயகனாக நடிக்க உள்ளனர்.

Trending News