புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நீ 1000 பேரோட ஆடுனா நான் 1500 பேரோட ஆடுவேன்.. விஜய் உடன் ஏட்டிக்கு போட்டி போடும் நடிகர் 

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நா ரெடி’ பாடல் விஜய்யின் 49வது பிறந்த  தினத்தன்று ரிலீஸ் ஆகி இணையத்தை தாறுமாறாக ரணகளம் செய்தது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இயக்கத்தில் விஜய் இந்த  பாடலில் ஆயிரத்திற்கும் மேலான குரூப் டான்ஸஸ் உடன் ஆடி அசத்தியிருப்பார்.

‘நீ ஆயிரம் 1000 ஆடினா, நான் 1500 பேரோட ஆடுவேன்’ என்று விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் கங்குவா படத்தில் சூர்யா மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறார். ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது  படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: தளபதிக்கு சவுக்கடி கொடுத்த விஜய் ஆண்டனி.. உசுப்பேத்தி வேடிக்கை பாக்குறீங்களா என ஆதங்கம்

 ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி கொண்டிருக்கும் இந்த படம் சரித்திர கதையம்சம் கொண்டது. 10 மொழிகளில் 3டி எஃபெக்டில் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாவது பாகத்திற்கான லீட் இருக்கும். எனவே முதல் பாகத்தை வரும் நவம்பரில் முடித்து அடுத்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கான சூட்டிங் கொடைக்கானல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: யூட்யூப்பை அதிர வைத்த தளபதியின் 4 சாங்.. ஒரு நாளில் இவ்வளவு வியூஸா

விரைவில் படத்தை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொமோஷன்பணிகளில் தீவிரமாக இறங்க படக்குழு ஆயத்தமாகிறது. இதனால் கொடைக்கானல் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்த நிலையில், சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடத்தப்பட ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சென்னைக்கு அருகே பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளை படமாக்க  படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த பாடலில் சுமார் 1500 நடன கலைஞர்கள் சூர்யாவுடன் சேர்ந்து நடனமாட போகின்றார்கள். ஏற்கனவே லியோ படத்தில் நான் ரெடி பாடலில் ஆயிரத்திற்கும் மேலான டான்ஸஸ் உடன் விஜய் நடனமாடி ரணகளம் செய்தார்.  அதன் தொடர்ச்சியாக லியோ படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று 1500 நடன கலைஞருடன் சூர்யா டான்ஸ் ஆட போகிறார். இந்த பாடல் ‘நா ரெடி’ பாடலை விட தெறிக்க விடப் போகிறது என்றும் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். 

Also Read: அரசியல் ஆதாயத்திற்காக மௌன சாமியாரான கமல்.. சாதி சர்ச்சையால் கொந்தளித்த விஜய் பட இயக்குனர்

Trending News