Gossip: உச்ச நடிகர் ஆக இருந்தவர் இப்போது கடனை அடைக்க இரவு, பகலாக ஓடிக்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவரது பேராசை தான். மிகப்பெரிய பிரபலங்கள் இருக்கும் இடத்தில் பிரம்மாண்ட வீடு கட்டி இருந்தார்.
இதற்காக பல கோடிகள் செலவும் செய்திருந்தார். ஆரம்பத்தில் இவர் கடன் வாங்கினாலும் அதை காலதாமதமாக செலுத்தவும் வாய்ப்பு இருந்தது. காரணம் இவருக்கு பெரிய இடத்தில் செல்வாக்கு இருந்தது.
இப்போது அந்த உறவை முறித்துக் கொண்ட நிலையில் கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இருக்கிறது. பிரம்மாண்ட வீடு கட்ட வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் இடம் படம் நடிப்பதாக அட்வான்ஸ் வாங்கி விட்டார்.
பேராசைப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகர்
இப்போது டைரக்ஷனும் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று இயக்குனர், நடிகர் என இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டிருக்கிறார். அதோடு வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி இவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது நெருக்கடி கொடுக்கிறார்கள்.
தன்னுடைய படத்தில் நடித்துவிட்டு மற்ற படத்திற்கு போகலாம் என்று கெடுபிடி செய்கின்றனர். சில தயாரிப்பாளர்கள் பொறுத்து பார்த்துவிட்டு நடிகர் மீது வழக்கு போட ஆரம்பித்து விட்டனர். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஹீரோ தலையைப் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.
பேராசை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதற்கு இப்போது நடிகரே உதாரணமாக இருந்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர்களிடம் சில காலம் அவகாசம் கேட்டு ஒவ்வொரு படத்தையும் சீக்கிரம் முடிக்க திட்டம் தீட்டு இருக்கிறாராம்.