புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர்யா-ஜோதிகா காதலுக்கு அணிலாய் இருந்த நடிகர்.. எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது கதையான சம்பவம்

Actor Surya-Jyothika: ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றனர். அதில் சூர்யா, ஜோதிகா ஜோடியை பலருக்கும் பிடிக்கும். பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் காதலித்து வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல கிசுகிசுக்கள் வந்தாலும் இவர்கள் இருவரும் தங்கள் காதலை யாருக்கும் வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் சூர்யாவின் அப்பா சிவக்குமார் என்பது பலருக்கும் தெரியும். இப்படி பல போராட்டங்களுக்கு பின்பே இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

Also read: ராஜமௌலிக்கே ஆப்படிக்க வரும் 1000 கோடி பட்ஜெட் படம்.. சூர்யாவின் அடுத்த பிரம்மாண்டம்

அந்த வகையில் இவர்களின் காதலுக்கு தூது போன அணிலாய் இருந்த ஒருவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா. சூர்யாவுக்கு நெருங்கிய நண்பரான இவர் ப்ரெண்ட்ஸ் பட சூட்டிங்கின் போது இந்த ஜோடிக்கு தூது புறாவாக மாறிய சம்பவத்தை ஒரு பேட்டியில் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

அதாவது விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் படத்தின் ஷூட்டிங் உடுமலைப்பேட்டையில் நடந்திருக்கிறது. அதே சமயத்தில் கமல், ஜோதிகா நடிப்பில் உருவான தெனாலி பட சூட்டிங்கும் கொடைக்கானலில் நடந்திருக்கிறது. இந்த இரு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ் கண்ணா தினமும் இந்த படங்களின் படப்பிடிப்பில் மாறி மாறி கலந்து கொள்வாராம்.

Also read: 2024 சூர்யாவின் அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. வாடி வாசலில் சீரும் காளையாய் சினம் கொண்ட ரோலக்ஸ்

அப்போது சூர்யா தெனாலி பட சூட்டிங்கில் இருந்த ஜோதிகாவை நலம் விசாரித்ததாக சொல்ல சொல்வாராம். உடனே ரமேஷ் கண்ணாவும் அங்கு ஜோதிகாவை சந்தித்து இந்த விஷயத்தை கூறுவாராம். உடனே ஜோதிகா சூர்யாவுக்கு ஏதாவது ஒரு தகவலை கூறி அனுப்புவாராம். அதை அப்படியே அவர் சூர்யாவிடம் கூறுவாராம்.

இப்படி ரமேஷ் கண்ணா இந்த ஜோடியின் காதலுக்காக பல வேலைகளை பார்த்திருக்கிறார். அதனாலேயே சூர்யா அவரை தெய்வ மச்சான் என்று கூட கூப்பிடுவாராம். இப்படி எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது என்றால் எலிப்புலுக்கை ஏன் காயுது என்ற நிலையில் ரமேஷ் கண்ணா இருந்திருக்கிறார். ஆனாலும் இந்த ஜோடியின் காதலுக்கு உதவிய விஷயத்தை அவர் சந்தோஷமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also read: பல கோடிகளில் புரளும் முதல் 8 நடிகர்கள்.. சூர்யாவை விட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

Trending News