திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மொத்த கேரியரையும் ஒரே மாதிரி நடித்து தொலைத்த நடிகர்.. பருத்திவீரன் கெட்டபில் விட்டதை பிடிக்க போராட்டம்

சினிமாவில் திறமை இருந்தும் பல நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திரம் கிடைக்காமல் உள்ளதால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் உள்ளனர். மேலும் தனக்கு இதுதான் வரும் என்று ஒரே கதாபாத்திரத்தை கொடுப்பதால் அந்த நடிகர்கள் அப்படியே ரசிகர்கள் மத்தியில் பதிந்து விடுகிறார்கள்.

அவ்வாறு பல நடிகர்கள் தங்களது கேரியரை தொலைத்துள்ளனர். அப்படி நல்ல திறமை உள்ள பிரபல நடிகர் ஒருவர் ஃப்ரெண்ட் கதாபாத்திரம் என்றே முத்திரை குத்தியதால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் தற்போது கஷ்டப்பட்டு வருகிறார். எப்படியாவது தனக்கான அங்கீகாரம் கிடைத்து விடாதா என போராடி வருகிறார்.

Also Read :திரையில் மட்டும் தான் வில்லன்.. ரியலில் குடிப்பழக்கமே இல்லாத, அசத்தலான 5 நடிகர்கள்

அதாவது மிஷ்கின் மற்றும் பா ரஞ்சித் இயக்கும் பெரும்பான்மையான படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நடிகர் கலையரசன். மதயானை கூட்டம் படத்தில் இவருக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் பலரிடத்திலிருந்து பாராட்டையும் பெற்றார்.

ஆனால் அதன் பிறகு மெட்ராஸ், முகமூடி, தானா சேர்ந்த கூட்டம், ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்த வந்தார். எல்லா படத்திலுமே ஹீரோக்களுக்கு நண்பராக நடித்திருந்தார். இதனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போனது.

Also Read :கோட் சூட், முறுக்கு மீசை கெத்து காட்டும் கபாலி,மெட்ராஸ் பட கலையரசன்.! வைரலாகும் புகைப்படம்

இப்போது தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என பருத்திவீரன் கெட்டப்பில் பேட்டை காளி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். ராஜ்குமார் இயக்கம் இத்தொடரில் கலையரசன், ஷீலா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பேட்டை காளி வெப் தொடர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி ஆஹா ஓடிடி தமிழில் வெளியாக உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இத்தொடர் வெளியான பிறகு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என கலையரசு நம்புகிறார்.

Also Read :தன் மனைவி மற்றும் மகளுடன் மெட்ராஸ் கலையரசன். க்யூட் போட்டோஸ் உள்ளே.

Trending News