ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நடிச்சா பணம் தர மாட்டாங்க, மரியாதை கொடுக்க மாட்டாங்க.. கடுப்பாகி சினிமாவை விட்டு விலகிய தனுஷின் நண்பர்

Actor Dhanush: எப்போதுமே சினிமாவில் ஜெயித்தவர்களின் கதையை விட, தோற்றவர்களின் கதைகளில் ரொம்பவே வலி அதிகமாக இருக்கும். நல்ல நடிப்பு திறமை இருந்தும், சினிமா மீது தீராத காதல் இருந்தும் இவர்களால் நினைத்த இடத்தை பிடிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் தாங்கள் நேசித்த சினிமாவையே வேண்டாம் என உதறி தள்ளி விட்டு ஒதுங்கி விடுகிறார்கள். அப்படி ஒதுங்கிய நடிகர் தன்னுடைய சினிமா அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

ஒரு சில நடிகர்களின் படங்களை கவனித்துப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரை தான் எல்லா படத்திலும் நடித்திருப்பார்கள். அப்படி ஹீரோவின் நண்பன் என்ற கேரக்டருக்காகவே உருவாக்கப்பட்டது போல் நடித்தவர் தான் நடிகர் கார்த்திக். இன்ஜினியரிங் படித்த இவருக்கு முதன் முதலில் அலைபாயுதே படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் ஷாலினியை பெண்பார்க்கும் கேரக்டரில் நடித்திருப்பார்.

Also Read:கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்ட 5 பிரபலங்கள்.. இவர்கள் செய்த தவறு என்ன?

கார்த்திக், சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். அலைபாயுதே படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இவருக்கு தொடர்ந்து இதுபோன்ற ஹீரோயின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. யாரடி நீ மோகினி படத்தில் கூட தனுஷின் நண்பராக நடித்திருப்பார். இவருடைய நடிப்பில் கண்ட நாள் முதல் திரைப்படம் குறிப்பிடத்தக்கது.

பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் சுசித்ரா இவருடைய முன்னாள் மனைவி. இவர் சுசித்ராவை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர் சினிமாவில் இருந்தும் மொத்தமாக ஒதுங்கிய கார்த்திக், தன்னுடைய கசப்பான அனுபவத்தை பற்றியும் பேசி இருக்கிறார்.

Also Read:த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

அதாவது இவர் நடிக்கும் படங்களில் எவ்வளவு சிறப்பாக நடித்தாலும், ஹீரோவை முதன்மையாக காட்ட வேண்டும் என்பதற்காக இவருடைய காட்சிகளை அசால்ட்டாக எடிட் செய்து தூக்கி விடுவார்களாம். அதேபோன்று பேசிய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பதோடு அடிப்படை மரியாதை கூட கிடைப்பது ரொம்ப கஷ்டமாம்.

இதனால்தான் கார்த்திக் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பதால் தான் விருப்பப்பட்டது போல் நடித்து ஆசையை தீர்த்துக் கொள்கிறாராம். நல்ல நடிப்புத் திறமை உடைய இவர், ஏதோ ஒரு கோபத்தால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். மீண்டும் படங்களில் நடிக்க முயற்சி செய்தால் கண்டிப்பாக சிறந்த இடத்திற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

Also Read:40 வயதிலும் ஹீரோயினாக ஜொலிக்கும் திரிஷாவின் 5 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களை வளைத்துப் போட்ட குந்தவை

Trending News