வாரிசு நடிகர்கள் சினிமாவில் சுலபமாக நுழைந்திட முடிகிறது. ஆனால் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே இந்தத் துறையில் ஜொலிக்க முடியும். அவ்வாறு தங்கத்தட்டில் பிறந்த இரண்டு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காமல் போராடி உள்ளனர்.
அப்பா சினிமாவில் பெரிய ஆள் என்பதால் மூத்த வாரிசின் முதல் படம் ஓகோ என்று ஓடியது. அடுத்தடுத்த படங்களில் சொதப்பிய அந்த நடிகர் நிலைத்து நிற்க முடியாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். மேலும் மீண்டும் ரீஎன்ட்ரில் நுழைய நினைத்த அவருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது.
Also Read : காதல் தோல்வி, தற்கொலை முயற்சியில் வாரிசு நடிகை.. 37 வயதாகியும் திருமணத்தை வெறுக்கும் சோகம்
சின்னத்திரையிலும் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நடிகர் எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இதனால் திறமை இல்லாமலேயே தந்தை பெரிய ஆள் என்பதால் சினிமாவில் இவர் நுழைந்துள்ளார் என பலரும் பேசி வந்தனர்.
அதன்பின்பு அவரது தம்பி சினிமாவில் நுழைந்த புதிதில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன்பின்பு அந்த நடிகர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் மொத்தமாக சொதப்பியது. தற்போது வரை சினிமாவில் நடித்து வரும் அந்த நடிகர் பத்து வருடமாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க போராடி வருகிறார்.
Also Read : கிசுகிசுவால் கேரியரை தொலைத்த அக்ரகாரத்து நடிகை.. பல வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை
சினிமாவில் 20 வருஷம் நடித்தும் பிரயோஜனமும் இல்லை என மன கஷ்டத்தில் அந்த நடிகர் இருந்தார். வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் தற்போது வரை அவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடிகிறது. அதுமட்டுமன்றி சினிமாவைத் தாண்டி மற்ற தொழில்களில் அந்த நடிகர் முதலீடு செய்து வருவாய் ஈட்டி வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதே அவருடைய ஆசை.
மேலும் சினிமாவை ஆதிக்கம் செய்த நபரின் இரண்டு மகன்களும் திரைத்துறையில் சாதிக்க முடியாமல் போனது அவருக்கு மிகப் பெரிய கஷ்டத்தை தந்துள்ளது. ஆனாலும் அவரின் இளைய வாரிசு எப்படியாவது ஒரு ஹிட் படத்தையாவது கொடுக்க வேண்டும் என தனது கடின உழைப்பை போட்டு வருகிறார்.
Also Read : விவாகரத்து லிஸ்டில் இணைந்த பிரபல தொகுப்பாளினி.. எல்லாம் சேனலோட ராசி, ஐயோ போச்சே!