ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஷாலை தூக்கி விட்ட மாதிரி வேட்டையனை தூக்கி விட வரும் ஹீரோ.. 100 கோடி பட்ஜெட்டா, நம்பற மாதிரி இல்லையே.?

Vishal-Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. லக லக லக என வேட்டையனாக மிரட்டி இருந்த சூப்பர் ஸ்டாரின் கேரக்டரில் மாஸ்டர் நடித்திருந்தது பல கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனாலேயே இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை.

அந்த வகையில் வேட்டையனாக ஜெயிக்க முடியாத லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தான் மலைபோல் நம்பி இருக்கிறார். இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது இப்படத்தில் மாஸ்டருடன் இணைந்து நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also read: சந்திரமுகி 2, இறைவன் இரண்டாம் நாள் வசூல் விவரம்.. ரஜினியின் இமேஜை காலி செய்த லாரன்ஸ்

சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த டீசரே படம் எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தி இருந்தது. அதன்படி தற்போது படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் இது நீங்கள் நினைப்பது போன்று சிறிய படம் கிடையாது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் தரமான படம். அதை தியேட்டரில் பார்க்கும்போது உங்களுக்கே புரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தியேட்டரில் அவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகி விட்டார். அந்த வகையில் தீபாவளிக்கு உங்களைப் போலவே நானும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also read: எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

இதை பார்த்த ரசிகர்கள் 100 கோடி பட்ஜெட்டா, நம்பற மாதிரி இல்லையே, அந்த அளவுக்கு பிரம்மாண்டம் இருக்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் எஸ் ஜே சூர்யா இதில் இருப்பது பட குழுவினருக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சமீபத்தில் விஷாலின் மார்க் ஆண்டனி வெளிவந்து பல கோடி வசூலை தட்டி தூக்கி இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் எஸ் ஜே சூர்யாவின் நடிப்புதான் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த வகையில் பல தோல்விகளால் துவண்டு போயிருந்த விஷாலை இவர் ஒரு லக்கி மேனாக இருந்து கை தூக்கி விட்டார். அதேபோன்று வேட்டையனாக பலத்த அடி வாங்கிய லாரன்ஸுக்கு இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

Trending News