பிரபல நடிகர் ஒருவர் என்னதான் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் அவரால் வெற்றியை கொடுக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வெளியான இவருடைய திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடிகருக்கும் வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றது.
வருகிற வாய்ப்பை எதற்கு விட வேண்டும் என்ற ஆசையில் நடிகர் அனைத்து படங்களிலும் நடிக்க சம்மதித்து கல்லாவை நிரப்பி கொண்டார். விளைவு அவர் நடித்த படங்கள் படு தோல்வியை சந்தித்தது. ஆனாலும் ஆசை அடங்காத அந்த நடிகர் இப்போதும் கூட கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
Also read: டாப் நடிகரை கண்ட்ரோல் செய்யும் மாடர்ன் சொர்ணாக்கா.. வெளியில ஹீரோ வீட்டுல ஜீரோ
இப்படி சரியாக கதையை தேர்ந்தெடுக்காமல் போகிற போக்கில் நடிக்கும் நடிகருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கிறதே என்ற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. இதை வெளிப்படையாகவே பலரும் பேச ஆரம்பித்த நிலையில் நடிகர் அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை நம்பி களத்தில் குதித்து இருக்கிறார்.
ஏற்கனவே வெற்றி பெற்ற படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக தான் இருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் இப்போது இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். தற்போது அவர் நடித்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்காக கடுமையாக உழைத்து வரும் நடிகர் இப்போது புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
Also read: முழு ஐட்டம் நடிகையாக மாறும் அனிகா.. மேடையில் நடந்த படு மோசமான சம்பவம்
அதாவது நடிகர் வித்யாசமான முறையில் எடுத்து வரும் இந்த திரைப்படம் ஒரு திருட்டு கதையாம். இப்போது பல இயக்குனர்களும் வெளிநாட்டு கதைகளை சத்தம் இல்லாமல் திருடி படம் எடுப்பதை வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதையே இந்த நடிகரும் பின்பற்றி இருக்கிறார். ஆனால் எப்படியோ இந்த விஷயம் காத்து வாக்கில் பரவ ஆரம்பித்துவிட்டது.
வரிசையாக படங்கள் அனைத்தும் ஊத்திக்கொண்ட நிலையில் நடிகர் வெற்றியை கொடுக்க இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறார். காதும் காதும் வைத்தது போல் இப்படி ஒரு வேலையை பார்த்த நடிகருக்கு விஷயம் அம்பலமானதில் பயங்கர அதிர்ச்சியாம். இன்னும் படம் வெளியாகாத நிலையில் இப்படி ஒரு விஷயம் படத்திற்கு பின்னடைவாக அமையும் என்று அவர் இப்போது கலக்கத்தில் இருக்கிறார்.
Also read: பொம்பள புள்ள வச்சிருக்கவங்க சூதானமா இருங்க.. பகிர் கிளப்பிய சாமி நடிகரின் மனைவி