வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பீடா கடையில் வேலை பார்த்து வந்த நடிகர்.. பாரதிராஜா படத்தில் நடித்தும், தோல்வி முகம் காட்டிய பரிதாபம்

Actor Vignesh: கிராமத்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொண்ட மாபெரும் இயக்குனர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் மேற்கொண்ட படங்களின் மூலம் வெற்றி கண்டு பிரபலங்களாய் மாறிய ஹீரோக்களும் உண்டு. இந்நிலையில் இவர் படத்தில் நடித்தும் தோல்விமுகம் காட்டிய நடிகர் ஒருவர் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த நடிகர்களுள் இவரும் ஒருவர். அவ்வாறு ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிர்ப்புறம் இருந்த பீடா கடையில் வேலை செய்து வந்த விக்னேஷ் என்பவரை தன் படத்தில் ஹீரோவாய் அறிமுகம் படுத்தினாராம் இயக்குனர் கணேஷ் ராஜ்.

Also Read: லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் 5 அக்கட தேசத்து டாப் ஹீரோக்கள்.. விடாமல் இழுத்துபிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார்

அவரின் துணை கொண்டு விக்னேஷ் தமிழ் சினிமா கனவை நிறைவேற்றிக் கொண்டார். 1992ல் கிராமத்து சப்ஜெக்டில் படமாக்கப்பட்ட சின்ன தாயி மூலம் அறிமுகமானவர் விக்னேஷ். இப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து ஹீரோவாக பாலு மகேந்திரா வண்ண வண்ண பூக்கள் என்னும் படத்தில் முதலில் இவரை நடிக்க நியமித்தாராம்.

அதன்பின் தான் பிரசாந்த் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். அதை மேற்கொண்டு தன் அடுத்தடுத்த படங்கள் ஆன அம்மா பொண்ணு, கிழக்கு சீமையிலே, உழவன் போன்ற படங்களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். இப்படங்களில் பாரதிராஜா இயக்கத்தில் வந்த கிழக்கு சீமையிலே இவரின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

Also Read:எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா.. தமன்னாவால் படாத பாடுபடும் நெல்சன்

அவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச பச்ச நடிகராய் இருக்க வேண்டிய இவர் ஆட்டத்தில் காய் களைக்க படுவது போல் மிகுந்த தோல்வியை தழுவி வந்தார். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியை தந்தது. ஒரு சில இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர் மேற்கொண்ட படம் தான் சூரி.

இப்படத்திற்கு இவர் சுமார் 70 முறை மொட்டை போட்டு அப்பட கதாபாத்திரத்திற்கு ஏற்ப முயற்சித்து இருப்பார். இருப்பினும் அவருக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஹீரோவாகும் வாய்ப்பை மறந்து சில படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டர் ஆக நடித்து வந்தார். தற்பொழுது ஒரு சில சீரியலில் தலை காட்டி வருகிறார்.

Also Read: அடிமடியில் கை வைத்த தளபதி.. 2026 தேர்தலுக்கு இப்பவே போட்ட அடித்தளம்

Trending News