சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அவன் எனக்கு தம்பி மாதிரி.. சென்டிமென்ட்டாக பேசி பாய் ஃபிரண்டுக்கு நாமம் போட்ட நடிகை

காலையில் காதலை சொல்லி மாலையில் பிரேக்கப் செய்வதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அப்படித்தான் டிவி சீரியலில் பிரபலமாக இருக்கும் அமுல் பேபி நடிகை தன்னுடைய காதலருக்கு பெரிய நாமம் ஒன்றை போட்டிருக்கிறார்.

காதலிப்பதை நடிகைகள் பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த அமுல் பேபியும் தன் காதலை சோசியல் மீடியாவில் போட்டோவாக போட்டு வளர்த்து வந்தார். ஆனால் இப்போது இந்த ஜோடி பிரிந்து இருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை கேட்டால் நடிகைக்குள் இப்படி ஒரு சூனியக்காரியா என தோன்ற வைத்திருக்கிறார். அதாவது நடிகை கடந்த சில மாதங்களாகவே பாய் பிரண்டை ஓரம் கட்டி கார் டிரைவருடன் நெருக்கம் காட்டி வந்திருக்கிறார். இது காதலரின் காதுக்கும் சென்று இருக்கிறது.

Also read: கில்மா சீனில் நடிக்க பிட்டு போட்ட இயக்குனர்.. எடுத்தேன் பாரு ஓட்டம் என எஸ்கேப் ஆன நடிகை

ஏற்கனவே தன்னுடைய கார் டிரைவர் எனக்கு தம்பி மாதிரி என நடிகை சென்டிமென்டாக பேசி லாக் செய்து வைத்ததால் காதலன் கொஞ்சம் அசால்ட் ஆக இருந்திருக்கிறார். ஆனால் இவர்களின் நெருக்கம் எல்லை மீறி போனவுடன் தான் காதலர் தான் ஏமாந்ததை உணர்ந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் தன் காதலியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். ஆனால் நடிகையோ கூலாக, செட் ஆகவில்லை என்றால் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். நன்றாக யோசித்த நடிகரும் இனிமேல் உனக்கும் எனக்கும் ஒன்றும் கிடையாது என பேசி பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: தள்ளாத வயதில் நடிகர் செய்த காரியம்.. அலறி அடித்த ஓடிய நடிகை

Trending News