புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பணத்திமிரில் திருமணத்தை தாண்டி அந்தரங்க உறவு.. நடிகையை சந்தி சிரிக்க வைத்த சம்பவம்

Gossip News: நடிகைகள் சிலர் ராஜபோக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தேவையில்லாத பிரச்சினைகளை தங்கள் தலையில் கட்டி கொள்வது உண்டு. சினிமாவில் சம்பாதித்தது பத்தாது என, ஆடம்பரத்திற்காகவும், தங்களை அழகாக காட்டிக் கொள்வதற்காகவும் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமோ, எல்லா வழியையும் முயற்சி செய்து பார்த்து விடுகிறார்கள்.

அப்படித்தான் இந்த பிரபல நடிகை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டிருக்கிறார். ஒரு காலகட்டத்தில் சினிமாவின் உச்சாணி கொம்பில் இருந்த இவர், திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் செட்டிலாகி விட்டார். சினிமாவில் இருக்கும் வரை குடும்ப குத்து விளக்கு கேரக்டரில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த இவர், இழுத்து வைத்திருக்கும் இந்த பிரச்சனை அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

Also Read:திருமணத்திற்கு முன்பே ஒத்திகை பார்க்கும் நடிகை.. காதலனுடன் வெளிநாடு சென்ற ரகசியம்

திருமணத்திற்கு பிறகு, இந்த நடிகைக்கு உயர் அதிகாரி ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நடிகை அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் மதிக்கப்படும் நகைகளை பரிசாக வாங்கியதோடு, நிறைய நேரங்களில் பணப்பட்டுவாடாவையும் நடத்தி இருக்கிறார். அதிகாரியும் காதலில் உருகி நடிகைக்கு வாரி இறைத்திருக்கிறார்.

நடிகையை சந்திக்க அடிக்கடி அவருடைய சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாகவும் வைத்திருந்திருக்கிறார் அந்த அதிகாரி. இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், அவர் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் பொழுது, விசாரணையில் நடிகை உடனான உறவும் வெளியில் வந்து விட்டது. நடிகையும் அதன் பின்னர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, மீடியாவிடம் அவர் என் நண்பர், குழந்தைகளுக்கு நகையை பரிசாக கொடுத்தார் என சப்பை கட்டு கட்டி இருக்கிறார் அந்த நடிகை. என்னதான் பூசி மொழுகினாலும், ஒட்டு மொத்த கதையும் சந்தி சிரித்து விட்டதால் இனி நடிகை எத்தனை காரணங்கள் சொன்னாலும் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. சினிமாவில் சம்பாதித்த பெயரை பணத்திற்கு ஆசைப்பட்டு மொத்தமாக கெடுத்துக் கொண்டார்.

Also Read:நடிக்க நாலு கோடி, படுத்தால் 7 கோடி.. திருமணத்திற்கு முன்பே ஒரு காட்டு காட்டி கேரியருக்கு பாலூத்திய நடிகை

Trending News