ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிளேபாய் நடிகரின் லிஸ்டில் இருந்த பவ்யமான நடிகை.. உருக உருக காதலித்து திருமணம் வரை சென்ற ரகசியம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகால் இளசுகளை கதி கலங்க வைத்த பவ்யமான நடிகை ஒருவர், இப்படி எல்லாம் செய்து இருக்கிறாரா என ஆச்சரியப்படுத்தக்கூடிய விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு அமைதியாக நடிக்கக்கூடியவர் தான் அந்த நடிகை.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி டாப் நடிகர்களின் படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் கதாநாயகியாகவும் ரவுண்டு கட்டி நடித்தவர். இவரை ஒரு தலையாக காதலித்த நடிகர்கள் நிறைய பேர். ஆனால் அவர்களை எல்லாம் கொஞ்சம் கூட திரும்பி பார்க்காத இந்த நடிகை, யாரையும் காதலிக்கவே இல்லை என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

Also Read: இருட்டில் சேரலாம், வெளிச்சத்துக்கெல்லாம் ஆசைப்படாதே.. நடிகை கல்யாணம் என்றவுடன் கம்பி நீட்டிய அரசியல்வாதி

ஆனால் அது உண்மையல்ல. அந்த நடிகை நம்பர் நடிகையின் காதலனுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அப்போது அந்த பிளேபாய் நடிகரின் மேனரிசத்தில் மயங்கி அவரை காதலிக்கவும் துவங்கினார். படத்தில் கூட இருவரும் நெருக்கமாக நடித்து அதை வெளிப்படுத்தினார்கள்.

அந்த பிளேபாய் நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் பவ்யமான நடிகை அவரை உருக உருக காதலித்து திருமணம் வரை கூட சென்றிருக்கிறார். ஆனால் அந்த நடிகர் பல நடிகைகளிடம் இப்படித்தான் பழகி வருகிறார் என தோழி நடிகைகள் பவ்யமான நடிகையிடம் கூற உடனே டாட்டா காட்டிவிட்டு அடுத்தடுத்த படத்தில் அமைதியாக கவனம் செலுத்தி எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also Read: 50 ஆயிரத்துக்கு ஃபாரின் சரக்கடித்து மட்டையான நடிகை.. வசமாக சிக்கிய அப்பாவியின் தலையில் விழுந்த பில்

இந்த நடிகைக்கு பிறகு தான் நம்பர் நடிகையை கொக்கி போட்டு அந்த பிளேபாய் நடிகர் இழுத்துவிட்டார். ஒரு வேலை பவ்யமான நடிகை மட்டும் இந்த நடிகரை திருமணம் செய்து கொண்டால் நிச்சயம் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்பட்டிருப்பார். இந்த பூனையும் பால் குடிக்குமா என நினைத்துக் கொண்டிருக்கையில் பவ்யமான மூஞ்சியை வச்சுக்கிட்டு பலான வேலையை பார்த்து இருக்கிறார்.

Trending News