Vijay: விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்தடுத்த நகர்வுகளுக்கு தயாராகிவிட்டார். அதேபோல் யாரை எதிர்த்து அரசியல் செய்யப் போகிறோம் என்பதை வெளிப்படையாக காட்டவும் தொடங்கி விட்டார்.
அந்த வகையில் ஆளும் கட்சிக்கு எதிராக சமீபத்தில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறித்து அவர் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதோடு நிற்காமல் சம்பவ இடத்திற்கே நேரில் சென்று பரபரப்பை கிளப்பினார்.
அதைத்தொடர்ந்து விரைவில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்து மாநாடு என அவர் பிஸியாக இருக்கிறார்.
அது மட்டும் இன்றி மக்கள் பணிகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் மீடியாக்களின் கவனமும் அவர் மீது திரும்பி இருக்கிறது. ஆனால் இப்படியே விட்டால் மக்கள் ஆதரவு கிடைத்துவிடும் என்ற காரணத்திற்காகவே அவர் மீது சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
திரிஷாவுக்கு வந்த அரசியல் ஆசை
அதில் முக்கியமானது திரிஷாவுடன் அவரை இணைத்துவரும் கிசுகிசு தான் ஏற்கனவே திரை உலகில் இந்த பேச்சு இருந்தது. தற்போது அரசியல் வட்டாரத்திலும் அவர்களை இணைத்து பேச தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிறந்தநாளுக்கு த்ரிஷா வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட ஒரு போட்டோ சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. ஏற்கனவே இருந்த சர்ச்சைக்கு இது எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியது.
அதைத் தொடர்ந்து தற்போது விரைவில் த்ரிஷா விஜய் கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளது. 2026 தேர்தலை விஜய் சந்திக்கும் முன்பாகவே இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிடும் என்கின்றனர்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது இப்படித்தான் ஜெயலலிதா அவருக்கு உறுதுணையாக இருந்து நன்மதிப்பை பெற்றார். அதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எப்படியோ அப்படித்தான் விஜய்க்கு திரிஷா என கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.
விஜய் கட்சியில் இணைய காத்திருக்கும் திரிஷா
- தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கூட்டணியா.?
- திரிஷாவின் மொத்த மானத்தையும் வாங்கிய சுச்சி லீக்ஸ்
- விஜய்யின் சாய்பாபா கோவிலில் திரிஷா