திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

வாய்ப்பும் போச்சு, காதலும் போச்சு.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை

காதலாவது கத்திரிக்காயாவது எனக்கு சினிமா தான் முக்கியம் என களத்தில் குதித்த நடிகை இப்போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாராம். வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்த நடிகைக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது.

அதனாலேயே அவர் உருகி உருகி காதலித்த அந்த நடிகரை டீலில் விட்டார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நடிகையின் குடும்பத்திற்கு இந்த காதல் சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த அவர் ஹீரோயின் வாய்ப்பை பார்த்ததும் அதை காற்றில் பறக்க விட்டார்.

அதைத்தொடர்ந்து இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிசியான நிலையில் ரசிகர்களும் இந்த ஜோடி எப்படியும் சேர்ந்து விடும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு சான்சே இல்லை என்ற ரீதியில் நடிகை பட வாய்ப்புக்காக அரையும் குறையும் ஆக பொதுவெளிகளில் தென்பட ஆரம்பித்தார்.

நடிகரும் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இது நடிகைக்கும் பெரிய ஷாக் தான் என்பது அவருடைய சோசியல் மீடியா பதிவுகளை பார்க்கும்போதே தெரிந்தது.

ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் நடிகை எங்கிருந்தாலும் வாழ்க என சோக கீதம் வாசித்து தன் வேதனையை மறைத்தார். ஆனாலும் அவர் அந்த நடிகரை மிஸ் செய்து விட்டார் என்று வெளிவந்த பல செய்திகள் அவரை மன உளைச்சலுக்கு தள்ளி விட்டதாம்.

இருப்பினும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு எந்த வருத்தமும் இல்லையே என்று சமாளித்தபடி பதில் சொன்னார். ஆனால் அவர் கண்களில் அந்த சோகம் இருந்ததை கண்டுபிடித்த ரசிகர்கள் வாய்ப்புக்காக இப்படி காதலை தொலைத்து விட்டீர்களே என பரிதாபத்துடன் பேசி வருகின்றனர்.

Trending News