திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கேட்க ஆளில்லாமல் தறிக்கெட்டு திரியும் நடிகை.. காதும் காதும் வச்ச மாதிரி கருவை கலைத்த கேவலம்

பிரபலமான சினிமா குடும்பத்தில் பிறந்த வாரிசு நடிகை இப்போது நம்பர் ஒன் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இவருடைய அம்மா ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நிலையில் மகளும் அந்த ஆசையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சமீப காலமாக அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் கேலி கூத்தாகி வருகிறது. சிறுவயதிலிருந்தே அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்த நடிகை இப்போது அவர் இல்லாத நிலையில் கேட்க ஆளில்லாமல் தறிக்கெட்டு திரிகிறாராம்.

அப்பாவின் அறிவுரையை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு நைட் பார்ட்டி, பப் என ஆண் நண்பர்களோடு என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அதிலும் காதலனுடன் இவர் எல்லை மீறிய விஷயம் தான் இப்போது சத்தம் இல்லாமல் புகைந்து கொண்டிருக்கிறது.

அதாவது நடிகை இளம் ஹீரோ ஒருவரை காதலித்து வந்தார். தற்போது இந்த ஜோடி நெருக்கமாக இருந்ததன் விளைவாக அவர் கர்ப்பமாகி இருக்கிறார். அதை காதும் காதும் வைத்த மாதிரி அந்த வாரிசு இப்போது கலைத்து விட்டாராம். சமீப காலமாகவே நடிகை தீவிர மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.

இவருக்கு போட்டியாக மற்றொரு வாரிசு நடிகையும் களத்தில் குதித்த நிலையில் இவருக்கான வாய்ப்பும் குறைந்து கொண்டிருக்கிறது. இதுவே அவருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதில் திடீரென கர்ப்பமானதால் நொந்து போன நடிகை யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்திருக்கிறார்.

Trending News