Actress Gossip News: அழகில் மட்டும் இல்லை, நடிப்பிலும் கெட்டிக்காரி என பெயர் வாங்கியவர் தான் அந்த நடிகை. சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் குறுகிய காலத்திலேயே கைகோர்த்து நம்பர் ஒன் நடிகையாக மாறினார். இன்றுவரை தன்னுடைய அழகினாலும், க்யூட்னசினாலும் சினிமா ரசிகர்களை தன் வசம் கட்டி போட்டு வைத்திருக்கிறார்.
நம்பர் ஒன் நடிகை ஆக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே பெரிய இடத்துப் பையனுடன் காதல் ஆகி பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார் இந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் நடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவனின் ஆதரவுடன் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
Also Read:மனைவியை மறக்க முடியாமல் தவிக்கும் ஹீரோ.. அந்தரங்க காதலருடன் நெருக்கம் காட்டி ஷாக் கொடுத்த நடிகை
கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதால் ஒரு கட்டத்தில் கணவருக்கே காதல் கசந்து போக நடிகை, நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என டாட்டா காட்டிவிட்டு வந்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி தொடர்ந்து நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்ததால் உடல் அழகில் அதிக கவனம் செலுத்தியவர் ஜிம் மட்டுமே கதி என கிடந்தார்.
பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அதிக நெருக்கம் காட்டி நடித்துக் கொண்டிருந்த நடிகை சமீபத்தில் உச்ச நடிகர் ஒருவருடன் சேர்த்து வைத்து பேசப்பட்டார். ஆனால் உண்மையில் நடிகை காதலிப்பது அவருடைய ஜிம் பயிற்சியாளரை தானாம். அவரை தவிர வேறு யாரும் வேண்டாம் என வெளிநாடு சென்றால் கூட அங்கு அவரை அழைத்துக் கொண்டு போய் தான் உடற்பயிற்சி செய்கிறாராம் நடிகை.
ஜிம் மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் இருவரும் சுற்றி திரிவதால் நடிகையின் குட்டு வெளிவந்து விட்டது. இருந்தாலும் இந்த உறவை காதல் மற்றும் கல்யாணம் என்று அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல எல்லாம் நடிகைக்கு விருப்பம் இல்லையாம். பயிற்சியாளருடன் வொர்க் அவுட்டுடன் நிறுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருக்கிறாராம்.
Also Read:வாய்ப்புக்காக நேக்கா வலை விரித்த நடிகை.. பொண்டாட்டியை மறந்து காலடியில் மயங்கி கிடக்கும் நடிகர்