புதன்கிழமை, ஜனவரி 15, 2025

90களில் குஷ்புக்கு போட்டியாக இருந்த நடிகை.. ரஜினியுடன் மட்டும் ஜோடி போட முடியாமல் போன பரிதாபம்

Actor Rajini: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ஒருவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அதுவும் 90களில் இவர் ஜோடி போடாத நடிகர்களே இல்லை என்ற அளவுக்கு எக்கச்சக்க படங்கள் நடித்தாலும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் நடிகைக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து நடிகை சமீபத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது அந்த காலத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில் உச்ச நடிகையாக இருந்த இவருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

Also Read : கவுண்டமணி ஜெயராம் காமெடியில் வெளிவந்த 5 படங்கள்.. சிறுசும் பெருசும் குஷ்பூ உடன் செஞ்ச ரகளை

அதுவும் 90களில் கொடிகட்டி பறந்த குஷ்பூக்கும், இவருக்கும் தான் போட்டி அதிகமாக இருந்தது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை சுகன்யா தான். சின்ன கவுண்டர், இந்தியன் என்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சுகன்யா இதுவரை ரஜினியின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஓய்வில்லாமல் சினிமாவில் சுகன்யா நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் ரஜினியுடன் நடிக்க தனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் சுகன்யா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை ஏர்போர்ட் செல்லும்போது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரை எதர்ச்சையாக சந்தித்துள்ளார்.

Also Read : இந்தியன்-2 வில் சுகன்யா வேண்டவே வேண்டாம்.. பெரிய தலையால் விரட்டப்பட்ட ஷங்கர்

அப்போது ரஜினியுடன் ஏன் நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கேட்டுள்ளார். இதைக்கேட்டு சுகன்யா அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டாராம். அதாவது முத்து படத்தில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் கேஎஸ் ரவிக்குமாரின் சாய்ஸ் சுகன்யா தானாம். ஆனால் யாரோ ரஜினியுடன் சுகன்யாவுக்கு ஜோடி போட விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் சொன்ன பிறகு தான் இந்த விஷயம் சுகன்யாவுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு தனக்கு தெரியாமலேயே அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன் என்று சுகன்யா கூறியிருக்கிறார். ஆனால் குஷ்புக்கு அந்த வாய்ப்பு கிடைத்து அண்ணாமலை, மன்னன், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Also Read : ரஜினி படத்தை காப்பி அடித்த சலார்.. 1000 கோடிக்கு அடி போடும் படம்

Trending News