திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

நயன்தாராவை பார்த்து ஏங்கும் நடிகை.. கெடச்சா அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கணும்

தமிழ் திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாராவுக்கு புகழ் இருக்கும் அளவுக்கு பிரச்சனைகளும் ஏராளமாக இருக்கிறது. இருந்தாலும் இவர் தன்னுடைய இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பல இளம் நடிகைகள் இவருடைய இடத்தை பிடிப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

ஆனாலும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார். அந்த வகையில் இப்போது இவரைப் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஏக்கப்பட்டு வருகிறாராம். அதாவது நயன்தாரா ஆறு வருடங்களுக்கு மேல் உருகி உருகி காதலித்த தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

Also read:என்னது நயன்தாராவுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் இல்லையா? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட டாக்டர்

கோலாகலமாக நடந்த இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி தான் கோலிவுட்டின் முக்கிய செய்தியாக மாறினர். அந்த அளவுக்கு இவர்களின் தேனிலவு உள்ளிட்ட விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் சமீபத்தில் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றதும் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா குறித்து ஏகப்பட்ட சர்ச்சையான விஷயங்களும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் நயன்தாரா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவருடைய காதல் கணவர் தான். நயன்தாராவுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை விக்னேஷ் சிவன் புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

Also read:தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி.. நயன்தாராக்கு டஃப் கொடுப்பாங்க போல

அதை பார்த்து தான் கீர்த்தி சுரேஷ் தற்போது மெர்சல் ஆகி போயிருக்கிறார். இது போன்ற ஒரு வாழ்க்கை துணை நமக்கும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமும் அவருக்கு இப்போது வந்திருக்கிறதாம். அதனால் அவர் தன்னை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் தன் அம்மாவிடம் இது குறித்து பேசி இருக்கிறார். பல மாதங்களாகவே கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ள அவருடைய அம்மா மேனகா வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நடிப்பு தான் முக்கியம் என்று பிடிவாதம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது மனமிறங்கி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் நயன்தாராவிற்கு கிடைத்தது போன்ற ஒரு வாழ்க்கை துணை எனக்கும் வேண்டும் என்று அவர் தன் பெற்றோரிடம் கண்டிஷன் போட்டு உள்ளாராம். மகள் திருமணத்திற்கு சம்மதித்ததே போதும் என்று அவரின் பெற்றோர்களும் வரன்களை தேட ஆரம்பித்துள்ளார்கள். அதனால் விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:பணம் பாதாளம் வரை பாயும், உறுதி செய்த நயன்தாரா.. சிக்கலில் இருந்து தப்பிக்க பக்காவா ரெடியான சர்டிபிகேட்

Trending News