சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஷாலுக்கு கல்யாண யோகமே வரக்கூடாது.. போன் போட்டு சோலியை முடித்து விடும் நடிகை

Actor Vishal: 45 வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார் விஷால். அவரும் காதல், நிச்சயதார்த்தம் என இந்த வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்க தான் பார்த்தார். ஆனால் அந்த கல்யாண யோகம் மட்டும் இவருக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதற்குப் பின்னால் அவருடைய முன்னாள் காதலி தான் இருக்கிறார் என்ற விஷயம் தான் அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது விஷாலும் வரலட்சுமியும் காதலித்து பின் பிரேக்கப் செய்து பிரிந்தது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தான் அவர் ஆந்திர தொழிலதிபர் மகளை திருமண நிச்சயதார்த்தம் செய்தார்.

Also read: 4 கோடி காசு வச்சுட்டு வராதீங்க, தயாரிப்பாளரா கதறிய விஷால்.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல

ஆனால் அது கை கூடாத நிலையில் நடிகை லட்சுமி மேனன் உடன் அவருக்கு திருமணம் என்ற செய்தியும் வைரலானது. உடனே பதறிப்போன விஷால் இதில் உண்மை கிடையாது. அவர் எனக்கு சிறந்த தோழி மட்டும் தான். என்னுடைய கல்யாணம் உங்களுக்கு தெரியாமல் நடக்காது என விளக்கம் கொடுத்தார்.

ஆனால் உண்மையில் வரலட்சுமி தான் இவர்களுக்கு போன் செய்து விஷால் நல்லவர் கிடையாது நம்பாதீர்கள் என்று கூறி பிரித்து விட்டாராம். அதனால் தான் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடைய திருமணம் நின்று போயிருக்கிறது. ஆனால் அப்போது ஸ்ரீ ரெட்டி விவகாரம் தான் காரணமாக சொல்லப்பட்டது.

Also read: மார்க் ஆண்டனி வெற்றியை முழுசா கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்.. சுற்றி அடிக்கும் ஏழரை நாட்டு சனி

தற்போது இத்தனை வருடங்கள் கழிந்த நிலையில் வரலட்சுமி தான் விஷால் திருமணத்திற்கு செக் வைக்கிறார் என்ற செய்தி பூதாகரமாக வெடித்து வருகிறது. ஏற்கனவே சரத்குமார் மேல் இருந்த கோபத்தில் விஷால் நடிகர் சங்க தேர்தலின் போது பயங்கர அலப்பறை கொடுத்தார்.

அதை தொடர்ந்து தான் அவர்களுடைய பிரிவு செய்தியும் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. இவ்வாறாக விஷால் நம்ப வைத்து தன்னை ஏமாற்றிய கடுப்பில் தான் வரலட்சுமி இப்படி எல்லாம் செய்வதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: 87 கோடி வசூலுடன் முரட்டு இயக்குனருடன் கைகோர்த்த மார்க் ஆண்டனி.. விக்ரம் இடத்தைப் பிடிக்கும் விஷால்

Trending News