வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரால் வாய்ப்பு இழந்த நடிகை.. சீரியலிலேயே காலத்தை ஓட்டும் அம்மணி

Gossip: சினிமாவில் வாய்ப்பு வேண்டுமா அப்ப அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் இதுதான் இப்போதைய எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இதற்கு சிலர் சம்மதித்து விடுகிறார்கள்.

சில நடிகைகள் வாய்ப்பே வேண்டாம் என்று ஒதுங்கி போன கதையும் உண்டு. அப்படித்தான் சோசியல் மீடியா மூலம் பிரபலமான இளம் நடிகை சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. வழக்கமாக நடிகையின் கால்ஷீட் விவரங்களை எல்லாம் அவருடைய அம்மா தான் பார்த்துக் கொள்வாராம்.

அப்படித்தான் இந்த வாய்ப்பு பற்றியும் அவர் அனைத்தையும் பேசி முடித்து இருக்கிறார். ஆனால் இறுதியில் அவர்கள் உங்கள் பொண்ணுக்கு ஆடிஷன் எல்லாம் கிடையாது.

ஆனால் சிலரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். உடனே பதறி போன தாய்குலம் என் பொண்ணு அப்படிப்பட்டவ கிடையாது. இந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகைக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனாலேயே சின்னத்திரையே கதி என சில சீரியல்களில் தலைக்காட்ட தொடங்கி அனைவருக்கும் பரிச்சயமான முகமாகி இருக்கிறார்.

Trending News