வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

30 வயசுக்கு மேல குழந்தை பெத்துக்க முடியாது.. கருமுட்டையை சேமிக்கும் நடிகை

தமிழில் சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகை அக்கட தேச படங்களில் தான் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் கூறிய செய்தி தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அதாவது நடிகைக்கு இப்போது 30 வயதாகும் நிலையில் அவருடைய கருமுட்டைகளையும் சேமித்து வருகிறாராம். இதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரபலம் ஒருவருடன் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் வரை அது செல்லவில்லை. ஆனாலும் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லையாம். இன்னும் சில வருடம் கழித்து தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.

ஆகையால் 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் இப்போதிலிருந்து தன்னுடைய கருமுட்டையை சேகரித்து வருவதாக நடிகை கூறியிருக்கிறார். ஏனென்றால் தனக்கு குழந்தை என்றால் அவ்வளவு பிரியம்.

ஆகையால் திருமணம் செய்ய தாமதம் ஆனாலும் கருமுட்டையை வைத்து குழந்தையை பெற்றுக் கொள்வேன் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த பலரும் இப்போது வயதாகி திருமணம் செய்யும் நடிகைகள் எல்லோருமே இதை ஃபாலோ பண்ணலாம் என்று கூறுகின்றனர்.

Trending News