வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கையெடுத்து கும்பிடும் ராகவா லாரன்ஸ்.. பெட்டி பெட்டியாக கல்லா கட்டியதால் வைக்கும் வேண்டுகோள்

நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்த ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோவாக பல படங்களில் கலக்கி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. மேலும் தொடர்ந்து லாரன்ஸ் பேய் சம்பந்தமான படங்களிலேயே நடித்து வருகிறார்.

இப்போது பி.வாசு இயக்கம் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் நடித்த வருகிறார். இப்படத்தில் ராதிகா, வடிவேலு போன்ற பிரபலங்களும் இணைந்துள்ளனர். சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் லாரன்ஸ் சினிமாவை தாண்டி ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

Also Read :சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி ரைட்சை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. கல்லா கட்ட தயாரான லாரன்ஸ்

அதாவது லாரன்ஸ் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதில் பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவி பெற்று வருகிறார்கள். லாரன்ஸின் இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய மக்கள் பண உதவி செய்து வருகிறார்கள்.

ஆனால் சமீபத்தில் லாரன்ஸ் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதாவது இந்த அறக்கட்டளைக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். ஏனென்றால் இப்போது நான் சினிமாவில் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். இந்தப் பணமே அவர்களுக்கு உதவ போதுமானது.

Also Read :ரீ-என்ட்ரி கைகொடுக்குமா.? கவர்ச்சி மூலம் வாய்ப்பை கெட்டியாக பிடித்த லாரன்ஸ் பட நடிகை

இதனால் இனிமேல் இந்த அறக்கட்டளையை நானே பார்த்துக்கொள்கிறேன். உங்களது ஆசீர்வாதம் போதும் என லாரன்ஸ் கூறியுள்ளார். இப்போது லாரன்ஸ் கைவசம் எக்கச்சக்க படங்கள் உள்ளது. இதில் வரும் பணத்தை வைத்த தனது அறக்கட்டளைக்கு தானே எல்லா விஷயத்தையும் செய்ய ஆசைப்படுகிறார்.

அதுமட்டுமின்றி இனிமேல் நான் யாருக்கு உதவி செய்தாலும் அவரின் காலில் விழுந்து தான் உதவி செய்வேன். யாரும் என் காலில் விழ வேண்டாம் என்று லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனென்றால் நாங்கள் பணத்தை தான் கொடுக்கிறோம், அவர்கள் தான் புண்ணியத்தை கொடுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Also Read :தம்பியுடன் களத்தில் இறங்கும் லாரன்ஸ்.. யாரும் எதிர்பாராத கூட்டணி

Trending News