
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பரசுராமனின் மகள் கல்யாணம் என்பதை விட ரோகிணி மாட்டுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது என்பதுதான் உண்மை. பொருத்தது போதும் இனி ரோகிணியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகும் நேரம் வந்துவிட்டது. பரசுராமன் மற்றும் கசாப்பு கடை மணியை சேர்த்து வைத்து இந்த புது டிராக் வந்ததற்கான காரணமே ரோகினியின் மலேசியா டிராமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான்.
அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்தவர் தான் கசாப்பு கடை மணி. ரோகிணி அப்பா பணக்காரரும் கிடையாது, மலேசியாவும் இல்லை என்ற உண்மை முத்துக்கு தெரிய வந்துவிடும். ஆனால் அனைய போற விளக்கு தான் பிரகாசமாக எரியும் என்பதற்கு ஏற்ப பரசுராமனின் மகள் கல்யாணத்தில் விஜயாவின் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இந்த சந்தோஷத்திற்கு பிறகு தான் ரோகினிக்கு ஆப்பு தயாராகி இருக்கிறது. அதாவது நடக்கப் போற கல்யாணத்தில் நகையை திருடிட்டு போவதற்காக ஒரு ஜோடி உள்ளே நுழைந்து விட்டார்கள். இந்த திருட்டு கும்பலை கண்டுபிடித்து நகையை காப்பாற்றியது மீனா மற்றும் முத்து தான். இந்த விஷயத்தை பரசுராமன், மணி இடம் சொல்கிறார்.
உடனே மணி அவர்களே நான் பார்த்து நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும் என்று சொல்லி மாலையுடன் வருகிறார். அந்த வகையில் முத்துவை பார்த்த மணி அங்கு இருந்து எஸ்கேப் ஆவதற்கு முயற்சி எடுப்பார். அல்லது ரோகிணி கண்ணில் மாட்டிவிட்டு ரோகிணி கெஞ்சி கேட்டுக் கொண்டதன்படி மணி, முத்து கண்ணில் சிக்கிக் கொள்ளாத அளவிற்கு தப்பித்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும் முத்துவுக்கு இந்த கல்யாணத்தில் மணி மிஸ் ஆகி இருக்கிறார் என்று சந்தேகத்தின் படி அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சி எடுப்பார். அதனால் நிச்சயம் முத்து மற்றும் மீனாவிற்கு கசாப்பு கடை மணி பற்றிய உண்மை தெரிய வந்துவிடும். ரோகினி இனியும் தப்பிக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த அத்தியாயம் முடிவுக்கு வரப் போகிறது. இதனால் விஜயா குடும்பத்தில் பூகம்பம் வெடிப்பதற்கு நாள் குறிச்சாச்சு.