Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் கல்யாணத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் தற்போது சுகன்யா வந்ததுக்கு பிறகு கதை கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது இதுவரை பாண்டியன் குடும்பத்தில் வந்த சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் நடுவில் ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அதுக்கே வேட்டு வைக்கும் விதமாக பழனிவேலுவை கட்டிட்டு வந்த சுகன்யா இரட்டை முகம் காட்டி பழனிவேலுவை டார்ச்சர் பண்ணி பாண்டியன் குடும்பத்தை ரெண்டாக பிரிக்கப் போகிறார். அதற்கு முதல் அச்சாணியாக அரசி காலேஜுக்கு போகும் பொழுது குமரவேலுவுக்கு பாய் சொல்லிட்டு போகிறார். இதை பார்த்த சுகன்யா நேரடியாக சக்திவேல் இடம் அந்த அரசியை வைத்து பாண்டியன் குடும்பத்தை பழி வாங்குவதற்கு பிளான் பண்ணி இருப்பது போல் தெரிகிறது.
அதனால் நானும் உங்களுக்கு உடந்தையாக இருந்து எல்லா விஷயங்களையும் செய்து தருகிறேன் என்று சொல்கிறார். அப்படி மட்டும் நடந்துவிட்டால் குமரவேலு அரசி கல்யாணம் நடந்துவிடும் இதன் மூலம் பாண்டியன் குடும்பத்தில் பூகம்பம் வெடித்து விடும். இதற்கிடையில் மீனாவின் அப்பாவுக்கு நெஞ்சு வலி என்று போன் வந்ததால் செந்தில் மீனாவை கூட்டிட்டு போய்விடுகிறார்.
அப்பொழுது மீனாவின் அப்பாவை பக்கத்தில் இருந்து பார்த்து அனைத்து பணிவிடைகளையும் மீனா மற்றும் செந்தில் செய்து விடுவார்கள். அத்துடன் எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும் செந்திலையும் ஜனார்த்தன் புரிந்துகொண்டு மருமகனாக ஏற்றுக் கொள்வார். அந்த வகையில் மீனா அவருடைய குடும்பத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்.