வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சூர்யாவுக்கு பாலிவுட் பயத்தை காட்டிய வில்லன் நடிகர்.. கங்குவா ப்ரோமஷனில் நடந்த தர்ம சங்கடமான நிகழ்வு

Suriya: நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக கங்குவா பட பிரமோஷனில் பயங்கர பிசியாக இருக்கிறார். இந்த பிரமோஷன் விழாவில் நடக்கும் சில நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அப்படி நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் சூர்யாவுக்கு ரொம்பவும் தர்மசங்கடமான நிலை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பக்கம் சூர்யாவை கிண்டல் பண்ணியும், இன்னொரு பக்கம் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் கமெண்ட்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

தர்ம சங்கடமான நிகழ்வு

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பத்தாணி நடித்திருக்கிறார். இயல்பிலேயே இவர் சூர்யாவை விட கொஞ்சம் உயரம் அதிகமானவர். அதிலும் நேற்றைய நிகழ்வின்போது இவர் ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கிறார்.

முதலில் படத்தின் வில்லன் நடிகர் பாபி தியோல் நடுவில் நின்று கொண்டு இந்தப் பக்கம் சூர்யா, அந்தப் பக்கம் திஷா என போஸ் கொடுத்தார்கள். அதன் பின்னர் பாபி தியோல் சூர்யா பக்கத்தில் திஷாவை நிற்க வைத்து விட்டார்.

கதாநாயகி தன்னைவிட உயரமாக இருந்தது சூர்யாவுக்கு அந்த போட்டோவில் நிற்பதற்கு ஒரு மாதிரியான தர்மசங்கடமான நிகழ்வாகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் கதாநாயகன் சூர்யாவை விட உயரமாக இருப்பதும் கிண்டல் பேச்சுக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் பாபி தியோல் வேண்டுமென்றே சூர்யாவை திஷா பக்கத்தில் நிற்க வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர்கள் இப்படித்தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை சூர்யா இந்தி படங்களில் நடிக்க இருக்கும்போது தன்னுடைய உயரத்தால் பல சர்ச்சைகளை பாலிவுட் நடிகர்கள் ஏற்படுத்துவார்கள், அதற்கு டிரையல் தான் இது எனவும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News