விஜய் சேதுபதி போடும் முக்கியமான கண்டிஷன்.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அதே சமயம் வில்லன் கதாபாத்திரத்திலும் எந்தவொரு தயக்கமில்லாமல் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய மார்க்கெட் தமிழிலும் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள,ம் ஹிந்தி என பிற மொழிகளிலும் உச்சம் பெற்றிருக்கிறது.

இதனால் சினிமா ஹீரோக்களில் இப்பொழுது ரொம்ப பிசியாக இருப்பது விஜய் சேதுபதி தான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப விஜய்சேதுபதிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால், எங்கு பார்த்தாலும் விஜய்சேதுபதி எந்த அளவிற்கு கிட்டத்தட்ட வருடத்திற்கு ஏழெட்டுப் படங்களை அசால்ட்டாக நடித்து ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்.

எந்த கேரக்டர் என்றாலும் அசால்டாக கால்சீட் கொடுத்து வருபவர். இப்பொழுது ஒரு முக்கியமான கண்டிஷன் போடுகிறாராம். தன்னைத் தேடி வரும் இயக்குனர்கள் அனைவரிடமும் தலையில் இடி விழும் அளவுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். நீங்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது காத்திருக்க வேண்டும்.

மூன்று வருடங்களுக்குப் பின் தான் நான் நடிப்பேன் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். வாங்கி வச்ச படத்தை எல்லாம் முடித்துக் கொடுக்கும் எண்ணத்தில் இப்படி ஒரு கண்டிஷனை போட்டிருக்கலாம். இருந்தாலும் இயக்குனர்களின் பார்வையில், ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதற்கு மட்டுமே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிறது.

அப்படி இருக்கும்போது இவருக்காக மட்டும் மூன்று வருடம் எப்படி காத்திருப்பது என இயக்குனர்கள் எல்லோரும் தெறித்து ஓடுகின்றனர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உலகநாயகன் கமலஹாசனுடன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். இருப்பினும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பரிமாணங்களில் தன்னுடைய நடித்த வெளிக்காட்டும் விஜய்சேதுபதியை அனைத்து இயக்குனர்களும் இயக்க ஆசைப்படுகின்றனர்.

சமீபத்தில் கூட பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பேசுகையில், வில்லனுக்கு விஜய் சேதுபதிதான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என ஆணித்தரமாக கூறியிருந்தார். இவரைப் போன்றே பல இயக்குனர்களும் இயக்க விரும்பும் இந்த நேரத்தில் விஜய்சேதுபதி போட்டிருக்கும் இந்த கண்டிஷனை கேட்டதும் தெறித்து ஓடுகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →