திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லால் சலாம் ரிலீஸ் முடிந்த கையோடு ரஜினி வீட்டில் நடக்கப் போகும் முக்கிய நிகழ்வு.. தலைவருக்கு இருந்த பெரிய குறை

Lal Salaam: மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ரோல்களில் நடிக்க சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்னும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆன நாளில் சமூக வலைத்தளங்களில் நல்ல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஐஸ்வர்யா தன்னுடைய அப்பா ரஜினிகாந்த்துக்கு சரியான கேரக்டர் கொடுத்திருப்பதாகவும், படத்தின் நெகட்டிவ் மொத்தத்தையும் ரஜினி தன்னுடைய நடிப்பினால் மறக்க வைத்து விட்டார் எனவும் விமர்சனங்கள் சொல்கிறது.

ரஜினிகாந்த ஏற்கனவே அவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்தார். ஆனால் அதை தன்னுடைய தவறான முடிவு என்பதை மறைமுகமாக நிறைய மேடைகளில் சொல்லி இருக்கிறார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்றும் அளவிற்கு இந்த படத்தை எடுத்திருப்பது ரஜினிக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தன்னுடைய டுவிட்டர் பதிவில் என்னுடைய அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

3 படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கி இருக்கிறார். இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய காதல் கணவர் தனுஷை பிரிந்து விட்டதாகவும், இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் ஐஸ்வர்யா கணவரை விட்டு பிரிந்து வந்தது ரஜினிக்கு ரொம்ப வருத்தமான விஷயமாக இருந்தது.

Also Read:பாசத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத தனுஷ்.. மறைமுகமாக ஐஸ்வர்யாவிற்காக செய்யும் காரியம்

என்னதான் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருந்தாலும், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் தன்னுடைய மூத்த மகள் மற்றும் பேரன்களை நினைத்து ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். தற்போது இந்த கவலைக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ஒரு நல்ல நிகழ்வு ஒன்று சூப்பர் ஸ்டார் வீட்டில் நடக்க இருக்கிறது. லால் சலாம் படத்தோடு சேர்த்து ரஜினிக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியான போது நடிகர் தனுஷ் அந்த வீடியோவை பகிர்ந்து லால் சலாம் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்று படம் ரிலீஸ் நாள் என்பதால் அதை நினைவூட்டும் விதமாக லால் சலாம் டுடே என ட்வீட் செய்திருந்த தனுஷ், ரஜினிகாந்த் தன் மகளுக்கு வாழ்த்து சொன்ன ட்வீட்டையும் ரீ ட்வீட் செய்திருக்கிறார்.

விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு ஐஸ்வர்யா பற்றி தனுஷ் எந்த இடத்திலும் பேசியது இல்லை. லால் சலாம் படத்தின் மூலம் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு வாழ்த்து சொல்லி இருக்கும் தனுஷ் தங்களுடைய திருமண வாழ்க்கையை புதுபிப்பதற்கும் தூது விட்டிருக்கிறார். தன்னுடைய மகன்களுக்காக தனுஷ் இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கும் ஐஸ்வர்யா தனுசுடன் தான் சேர வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், கண்டிப்பாக அப்பாவிற்காக ஐஸ்வர்யா தனுசு உடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

Also Read:சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

Trending News