புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முதல் சந்திப்பிலேயே லதாவை திணறடித்த ரஜினி.. பிரச்சனைக்குப் பிறகும் கல்யாணத்திற்கு சம்மதிக்க இதுதான் காரணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் தம்பதியினர் தற்போது வரை மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் வாழ்வில் நடக்காத பிரச்சனைகளை இல்லை என்று சொல்லலாம். மேலும், இவர்களது காதல் கதையும் வித்யாசமாக இருக்கும்.

அதாவது அப்போது தான் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நடிகர் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் லதா எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். கல்லூரியில் ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்று லதாவை அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்க வந்தார் லதா.

Also Read : ஒரே நாளில் 5, 6 படங்கள் நடித்த கேரக்டர் ஆர்டிஸ்ட்.. ரஜினி, கமல் என தேடி வந்த பட வாய்ப்புகள்

அப்போது ரஜினி லதாவை உற்றுப் பார்த்துவிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று முதல் சந்திப்பிலேயே கேட்டுள்ளார். இதைக் கேட்டு ஒரு கணம் திணறிப் போன லதா எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அதன் பின்பு ரஜினியின் கடந்த கால வாழ்க்கையை லதா ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளார்.

அப்போது சிறுவயதிலேயே தாயை இழந்து அண்ணனின் அரவணைப்பில் ரஜினி வளர்ந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் அப்போது ரஜினி பிஸியாக நடித்து வந்ததால் நரம்பியல் பிரச்சனையும் இருந்துள்ளது. ஏனென்றால் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து ரஜினி படங்களில் நடித்து வந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

Also Read : ஜினியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. கமலின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் படம்

மேலும் அம்மாவின் அன்புக்காக ரஜினி ஏங்கி வருகிறார் என்பதை புரிந்து கொண்ட லதாவுக்கு அவர் மீது காதல் மலர்ந்துள்ளது. அதன் பின்பு இவர்களின் காதலுக்கு பல எதிர்ப்புகள், பிரச்சனைகள் வந்தது. கடைசியாக 1981 ஆம் ஆண்டு திருப்பதியில் பெருமாள் முன் சாமி கும்பிடுவது போல் நின்று கொண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் லதாவின் கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.

லதாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ரஜினி சொந்த வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் பல உயரங்களை அடைந்தார். இதுமட்டுமின்றி ஆரம்பத்தில் பல கெட்ட பழக்கங்களுடன் இருந்த ரஜினியை தனது அன்பால் லதா மாற்றினார். மேலும் ரஜினி ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கவும் லதா தான் காரணம்.

Also Read : போலீஸ் வேடத்தில் பட்டையை கிளப்பிய ரஜினியின் 6 படங்கள்.. ஏகாம்பரத்தை வெளுத்து வாங்கிய அலெக்ஸ் பாண்டியன்

Trending News