Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கக்கூடிய இந்த நடிகைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகரையே காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை, திடீரென்று அவரை விட்டு பிரிந்து வாழ துவங்கினார். […]

சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கக்கூடிய இந்த நடிகைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகரையே காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை, திடீரென்று அவரை விட்டு பிரிந்து வாழ துவங்கினார்.

கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் கொஞ்ச காலம் பிரிந்து வாழ முடிவெடுத்தனர் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த அப்பாவி கணவர் மீது நடிகை மகளிர் காவல் நிலையத்தில் அதிரடியாக புகார் ஒன்றை அளித்தார்.

தனியாக வசித்து வரும் தன்னுடைய செல்போனுக்கு அந்தரங்க மெசேஜ் அனுப்பி, கொலை மிரட்டல் விடுவதாக கணவர் மீது அந்த நடிகை பழி போட்டார். பிறகு கணவரையும் விசாரித்த போலீசார் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தனர்.

ஆனால் உண்மையாகவே கணவர் அப்படி எந்த ஒரு மிரட்டலையும், அந்தரங்க மெசேஜையும் அனுப்பவில்லை என்பது பின்னர் தான் தெரியவந்தது. அந்த அப்பாவி கணவர் மீது பழி போட்டு அவரை கெட்டவராக சித்தரித்து, அதற்காகத்தான் அவரை பிரிந்தேன் என்றும் கூறினார்.

இப்போது கணவரைப் பிரிந்து வாழும் நடிகை சந்தோசமாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஏனென்றால் சமூக வலைதளத்தில் இவர் தாராளமாக கவர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக சேலை உடுத்தி இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஆண் நண்பருடன் நெருங்கி பழக்குவது அப்பட்டமாகவே தெரிகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.