ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

22 வருடங்களாக விஜய்க்கு கிடைக்காத வாய்ப்பு.. சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த அஜித்

Ajith acted with the superstar: தற்போது வெளிவரும் படங்கள் மல்டி ஸ்டார் படமாக்க வேண்டும் என்பதால் அனைத்து பக்கங்களிலிருந்தும் முன்னணி நடிகர்களை கூப்பிட்டு நடிக்க வைத்து பிரம்மாண்டமாக ஆக்கி விடுகிறார்கள். ஆனால் இதே ட்ரிக்ஸ்சை 22 வருடங்களுக்கு முன் செய்து காட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அந்த வகையில் இவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அஜித்.

ஆனால் தற்போது 22 வருடங்கள் ஆகியும் விஜய்க்கு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அசோகா. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஆக வரும் ஷாருக்கானுடன் அஜித் சுசிமா என்ற கேரக்டரில் இணைந்து நடித்திருக்கிறார்.

அஜித் முதன்முதலாக பாலிவுட்டில் நடித்த படமும் இதுதான். இதுவரை கடைசியாக நடித்த படமும் இந்தப் படம் தான் என்று சொல்லும் அளவிற்கு சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்தார். ஆனால் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு விஜய்க்கு மட்டும் இன்னும் வரை கிடைக்கவில்லை. மேலும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் ஷாருக்கானை எதிர்த்து செய்யும் சண்டைக் காட்சிகள் அனைத்தும் பிரமிக்க வைத்திருக்கும்.

Also read: அஜித்துடன் ஜோடி போட்டு காணாமல் போன 5 நடிகைகள்.. சின்னத்திரையில் கலக்கும் அந்த 6 அடி ஹீரோயின்

அது மட்டுமில்லாமல் இந்த கேரக்டர் அஜித்துக்கு ரொம்பவே பொருத்தமானதாகவும், ஹிந்திலும் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு பிரமாதமாக அமைந்திருக்கும். அத்துடன் அசோகா படத்தை பார்க்கும் பொழுது ஒரே படத்தில் இரண்டு பிரம்மாண்ட நடிகர்களின் நடிப்பை பார்த்து ரசிக்க முடிகிறது.

மேலும் இப்படத்தின் கதையானது ஷாருக்கான் மற்றும் அஜித் இவர்களில் யார் ஆட்சியை பிடிக்க போவது என்பதை பொறுத்து மாபெரும் யுத்தம் நடக்கும் வரலாற்று கதை தான். ஆனால் கடைசியில் அஜித் இதில் இறக்கும் படியான காட்சிகள் அமைந்திருக்கும். அத்துடன் கொடூர மன்னனாக இருந்து ஆட்சியைப் பிடிக்க நினைத்த ஷாருக்கானும் கடைசியில் எனக்கு எந்தவித பதிவையும் வேண்டாம் என்று துறவ வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வார்.

Also read: பண நெருக்கடியால் திண்டாடி வரும் விடாமுயற்சி.. இதுல அஜித், மகிழ் திருமேனி மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்

Trending News