Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஒன்றாகவே மரணித்த தம்பதி.. பாரதிகண்ணம்மா தொடரில் வரப்போகும் அதிரடி டுவிஸ்ட்

ஒன்றாகவே மரணித்த தம்பதி.. பாரதிகண்ணம்மா தொடரில் வரப்போகும் அதிரடி டுவிஸ்ட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் ராமன் என்பவர் தனது மனைவி ஜானகிக்கு உடல்நிலையில் பிரச்சினை உள்ளதால் பாரதி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து வருகிறார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஜானகியின் […]

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் ராமன் என்பவர் தனது மனைவி ஜானகிக்கு உடல்நிலையில் பிரச்சினை உள்ளதால் பாரதி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து வருகிறார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஜானகியின் உடல் ஆபரேஷனுக்கு ஒத்துழைப்பது மிகக்கடினம்.

ஆனால் மனைவி ஜானகி மீது அதீத அன்பு வைத்திருக்கிறார் கணவர் ராமன். இந்நிலையில் ஆபரேஷனுக்கு ஏற்பாடுகள் செய்யும் போது திடீரென ஜானகி அம்மாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் கண்ணம்மா, பாரதி என அனைவரும் ஓடிவந்த பார்க்கும்போது ஜானகி இறந்துவிடுகிறார்.

அப்போது பாரதி பரிசோதித்து இவர் இறந்து விட்டதாகக் கூறும் போது அருகிலுள்ள ஜானகியின் கணவர் ராமன் ஜானகி மீது சாய்ந்து உயிரை விடுகிறார். இதனால் எல்லோரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவ்வளவு வயதான பிறகும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பினால் இறுதி வரை ஒன்றாகவே பயணித்து மரணித்துள்ளனர்.

இந்நிலையில் சவுந்தர்யா அகிலன் இடம் ஜானகி,ராமன் தம்பதியினரை பற்றி பேசுகிறார். ஒருபுறம் இந்த தம்பதியினர் இறப்பதற்கு முன்பு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரிடமும் நீங்கள் இருவரும் குடும்பத்துடன் வெளியே சென்று உங்கள் மனதில் உள்ள விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என சத்தியம் வாங்கியிருந்தனர்.

இதனால் பாரதி கண்ணம்மாவுக்கு போன் செய்து நாளைக்கு லீவ் சொல்லிடு எனக் கூறுகிறார். எதற்கு என கண்ணம்மா கேட்க, நாம் ராமன் சாருக்கும், ஜானகி அம்மாவுக்கும் சத்தியம் பண்ணி கொடுத்திருக்கிறோம். அந்த சத்தியத்தை காப்பாற்றுவது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை என கூறுகிறார்.

இதனால் லட்சுமியை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவும், ஹேமாவை அழைத்துக்கொண்டு பாரதியும் பிக்னிக் செல்ல உள்ளனர். அங்கு சென்ற பாரதி தனது மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் கண்ணமாவிடம் சொல்ல வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் பாரதி,கண்ணம்மா இணைந்து வாழ்வார்களா என்ற பெரிய எதிர்பார்ப்புடன் இத்தொடர் செல்ல இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.