மனிதர்கள் முதல் விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனங்கள் என அனைவருக்குமே பசி, தூக்கம் போன்று உறவு என்ற செயல்பாடும் பொதுவானதாக இருக்கிறது. இதில் உறவு என்ற செயல்பாடு ஒவ்வொரு உயிரினத்திடமும் மாறுபடுகிறது.
குறிப்பாக பாம்பின் வாழ்வியல் வித்தியாசமானவை. ஜீசஸ் ரிவாஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ ஹைலேண்ட்ஸ் பல்கலையில் பூச்சியியலாளர் ஆக இருக்கிறார். இவர் செய்த ஆராய்ச்சியில் வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுக்கு பின் ஆண் பாம்பு கதி அவ்வளவு தான்.
ராட்சத அனகோண்டா பாம்புகளின் உறவில் ஈடுபட்ட பிறகு, என்ன செய்யும் என்ற ஒரு அதிர்ச்சிகர தகவலை கண்டறிந்துள்ளார். இந்த வகை பெண் பாம்புகள், இனச்சேர்க்கைக்கு பிறகு உறவு வைத்துக்கொண்ட ஆண் பாம்புகளை நசுக்கி கொன்று விழுங்கிவிடுமாம்.
பொதுவாக எந்த ஒரு உயிரினத்திலும், ஆண்கள் உடலளவில் பெரியதாக இருப்பதை நாம் கவனித்திருப்போம். உறவின்போதும் பெரும்பாலும் ஆண் வகைகளே ஆதிக்கம் செலுத்துவது தான் இயற்கையாக உளள்து. ஆனால் அனகோண்டாவில் இது மாறுபடுகிறது. ஆண் அனகோண்டாக்களை விட பல இடங்களில் பெண்கள் உருவ அமைப்பு பெரியதாக இருக்கின்றன. இந்த பெண் பாம்புகள் ஆண்களை விட ஐந்து மடங்கு அளவில் பெரியதாக இருக்குமாம்.
மனிதர்கள் நிலையை ஒப்பிட்டு பார்க்கையில், பாம்புகளின் இனசேர்க்கை தலைகீழாக உள்ளது. ஒரு பெண் பாம்பு பல ஆண் பாம்புகளுடன் உறவில் இருந்தாலும், பெரும்பாலும் ஆண் பாம்புகள் ஒரு பெண்ணிடம் மட்டுமே இனச்சேர்க்கை செய்வதாகவும் கண்டறிந்துள்ளனர். மேலும் பெண் பாம்புகள் தான் உறவில் ஆர்வம் காட்டுமாம்.
இதனால் பெண்களே உறவின் போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இனச்சேர்க்கை முடிந்த பின்னர் பெண் பாம்புகள் ஆண் பாம்புகளை நசுக்கி விழுங்கிவிடுகின்றன. இதை கேள்வி பட்ட ஆண் மனிதர்கள்..”எல்லாத்துலயும் ஆண்கள் நாங்க தான் டா பாவம் ..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.