வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் கல்யாணம்.. மிரண்டு போன உலக நாடுகள், வைரல் போட்டோஸ்

Anand Ambani: கடைசிப் பிள்ளைக்கு கடலை ஒடச்சி கல்யாணம் பண்ணனும்னு சொல்வாங்க. முகேஷ் அம்பானி தன்னுடைய கடைசி பிள்ளைக்கு கடல் தாண்டி விருந்து வச்சு கல்யாணம் பண்ணுறாரு. உலக அளவில் இருக்கும் பணக்காரர்களின் லிஸ்டில் முகேஷ் அம்பானி முக்கியமான ஆள்.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் கல்யாணம்

இந்தியாவில் பெரும் வர்த்தகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் அவருடைய கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கு இன்று மும்பையில் இருக்கும் ஜியோ உலக மாநாடு அரங்கில் திருமணம் நடைபெறுகிறது.

கல்யாணம் இன்றைக்கு தான் என்றாலும் கடந்த சில மாதங்களாகவே கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டன. கையில் இருக்கும் காசை வைத்து உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் பிரபலங்களை தன் வீட்டு விசேஷத்திற்கு வரவைத்து விட்டார் முகேஷ் அம்பானி.

கடைசி பிள்ளை என்பது மட்டுமில்லாமல் ஆனந்த் அம்பானி கடந்து வந்த பாதையும் கடினமானது என்பதால் தான் இந்த திருமணம் இவ்வளவு ஜோராக நடக்கிறது. ஆனந்த் அம்பானி பயங்கரமான உருவ கேலிக்கு ஆளானாலும் தன் முகத்தில் இருக்கும் சிரிப்பை எப்போதுமே மாற்றிக் கொள்ளாதவர்.

இவருடைய திருமணம் காதல் திருமணம். ராதிகாவை பல ஆண்டுகள் காதலித்து இன்று திருமணம் செய்கிறார். பணக்கார பையன் வலை வீசி புடிச்சிட்டாங்கன்னு ராதிகாவை சொல்ல முடியாது. அவங்களும் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

இந்த திருமணத்திற்காக அம்பானி குடும்பம் ரொம்பவே மெனக்கட்டு இருக்கிறது. நிச்சயதார்த்தம், உறவினர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து, சொகுசு கப்பலில் விருந்து என அமர்க்களப்படுத்தி விட்டது. ஊழியர்கள் அத்தனை பேருக்கும் பரிசு தொகுப்புகளையும் இந்த குடும்பம் கொடுத்திருக்கிறது.

இந்த திருமணத்திற்கு எல்லா மூலைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் வரை இருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மும்பை முழுக்க இன்று ஐடி கம்பெனிகளுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு கோலாக்கலமாக கொண்டாடப்படும் இந்த திருமணத்தின் செலவு மட்டும் 5000 கோடியாகும். அதாவது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் இது 0.5% தான். அது சரி பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான், காசு இருக்கிறது கொண்டாடுகிறார்கள்.

Anand ambani - Radhika merchant
Anand ambani – Radhika merchant
Anand ambani - Radhika merchant
Anand ambani – Radhika merchant
Anand ambani - Radhika merchant
Anand ambani – Radhika merchant
Anand ambani - Radhika merchant
Anand ambani – Radhika merchant

Trending News