Anand Ambani’s 2 Crore Returned Gift: கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதியாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் நிஜா அம்பானியின் மகனாக இருக்கும் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் திருமணம் கடந்த ஜூலை 12ஆம் தேதி குஜராத்தில் ஜாம் நகரில் கோலாகலமாக கல்யாணம் முடிந்து இருக்கிறது.
இதில் ஒட்டுமொத்த பணக்காரர்கள், இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி மற்றும் சினிமாத் துறையில் உள்ள டாப் செலிபிரிட்டிஸ் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்படி கலந்து கொண்ட பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி ரெண்டு கோடி மதிப்பிலான ரிட்டன் கிப்ட் கொடுத்து அவர்களை கௌரவ படுத்திருக்கிறார்.
ஆனந்த அம்பானி நெருங்கிய தோழர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் உட்பட அனைவருக்கும் ஆடம்பரமான Audemars Piguet லிமிடெட் எடிஷன் வாட்சை பரிசாக கொடுத்திருக்கிறார். அப்படி ஆனந்த அம்பானி கொடுத்த வாட்ச் ஒவ்வொன்றும் 2 கோடிக்கும் மேலாக மதிக்கப்படுகிறது.
அத்துடன் அவர் கொடுத்த விலை உயர்ந்த வாட்ச்சை பிரபலங்கள் போட்டு போட்டோ மற்றும் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். அந்த வாட்ச் கிட்டத்தட்ட 40 மணி நேரம் பவரை ரிசர்வ் பண்ணுகிறது. 18K இளஞ்சிவப்பு தங்க வளையலுடன் AP மடிப்பு கொக்கி மற்றும் கூடுதல் நீல முதலை பட்டாவுடன் இருக்கிறது.
மேலும் 20 மீட்டர் வரை தண்ணீரில் இருந்து பாதுகாக்கும் திறமை கொண்டது. கடிகாரம் 41 மிமீ 18 கே இளஞ்சிவப்பு தங்க உறை, 9.5 மிமீ தடிமன், சபையர் படிக பின்புறம் மற்றும் ஸ்க்ரூ-லாக் செய்யப்பட்ட கிரீடத்துடன் உள்ளது.
டயல் இளஞ்சிவப்பு தங்க நிறத்தில் கிராண்டே டாபிஸ்ஸேரி பேட்டர்ன், நீல கவுண்டர்கள், பிங்க் கோல்ட் ஹவர் மார்க்கர்கள் மற்றும் ராயல் ஓக் கைகளில் ஒளிரும் பூச்சுடன் இருக்கிறது.
டைம்பீஸில் ஒரே தொனியில் உள்ள உளிச்சாயுமோரம் மற்றும் உற்பத்தி காலிபர் 5134 சுய-முறுக்கு இயக்கம் ஆகியவை வாரக் குறிப்பு, நாள், தேதி, வானியல் நிலவு கட்டக் காட்சி, மாதக் காட்சி மற்றும் லீப் ஆண்டு காட்டி உள்ளிட்ட பல அம்சங்களுடன் அந்த வாட்ச் ஆடம்பரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காத டாப் செலிபிரிட்டி ஆடம்பரமான வாட்சை பார்த்து மிரண்டு போய் விட்டார்கள்.
ஆனந்த அம்பானியின் கல்யாண வைபோகங்கள்
- கல்யாணத்துக்கு கூப்பிடாமலேயே மொய் வாங்கிட்டீங்களே அம்பானி
- பல ஆயிரம் கோடிகளை வாரி இறைத்த ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் கல்யாணம்
- அம்பானி வீட்ல கல்யாணம், ரீசார்ஜ் காசு ஏத்திட்டாங்க